குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகப் பொதுநல வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் தன்னிச்சையாகப் பதிந்துள்ளது.
கொரோனா அதிகமாக பரவிவருவதால் மாநில மேலாண்மை பிரச்னை என்று பொதுநல வழக்கைப் பதியுமாறு உயர்நீதிமன்ற பதிவாளருக்குத் தலைமை நீதிபதி விக்ரம் நாத் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.
உள்கட்டமைப்பு வசதிகள், பரிசோதனை கருவிகள், படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதி, ரெம்தேசிவிர் மருத்து ஆகியவற்றிற்கு பற்றாக்குறை தொடர்பான ஊடக செய்திகளைப் பார்க்கும்போது குஜராத் மாநிலம், சுகாதார அவசர நிலையை நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் 50% பணியாளர்களுக்கு கொரோனா- காணொளி வழியாக வழக்கை விசாரிக்க முடிவு
இது தொடர்பான ஊடகங்களில் வரும் செய்திகளின் எண்ணிக்கை இந்த விசயத்தைப் புறக்கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
“ஊடகங்களில் வந்திருக்கும் கட்டுரைகள் நிலைமையைக் கூர்ந்து ஆராய்வதோடு, மாநில சுகாதார அவசரநிலை நோக்கிச் செல்வதை குறிக்கிறது” என விக்ரம் நாத் கூறியுள்ளார்.
குஜராத்தில் கொரோனா சூழ்நிலைகள் தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றம் இரண்டாவது முறையாகப் பொதுநல வழக்கைப் பதிந்துள்ளது. முதல் வழக்கு கடந்த ஆண்டு பதியப்பட்டு முறையாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு அழைத்தால் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு தயார் – ராகேஷ் திகாயத்
இந்த வழக்கில் குஜராத் அரசு, குஜராத் சுகாதாரத்துறை மற்றும் மத்திய அரசை இணைக்க உயர்நீதிமன்ற பதிவாளருக்குத் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் முதல் விசாரணை தலைமை நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி பார்கவ் டி காரியா அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 12) காணொளி வாயிலாக விசாரணைக்கு வருகிறது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.