மதமாற்றத் தடைச் சட்டம் தொடர்பான குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றக் கோரி குஜராத் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைக் குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு ஒருவர் மாற்றும்போது மத குருமார்கள் மாவட்ட நீதிபதியிடம் அனுமதி பெறுவதை கட்டாயப்படுத்தும் சட்டப்பிரிவு 5ஐ செயல்படுத்த குஜராத் உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
மேலும், மதம் மாறியவர் ஒரு பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் மாவட்ட நீதிபதிக்கு தகவல் அனுப்ப வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத் அரசின் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி பைரன் வைஷ்ணவ் அடங்கிய அமர்வு, ”ஆகஸ்ட் 19 தேதி வழங்கப்பட்ட உத்தரவைத் திருத்த வேண்டிய எந்த அவசியமான காரணத்தையும் நாங்கள் காணவில்லை” என அவர்கள் குறிப்பிட்டனர்.
மாநில அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கமல் திரிபாதி, “குஜராத் மத சுதந்திரம் (திருத்த) சட்டம் 2021ன் பிரிவு 5, 2003 ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து நடைமுறையில் உள்ளது. அதற்கும் திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
பிரிவு 5க்கு தடை விதிக்கப்பட்டால் முழு சட்டத்தின் பயன்பாட்டிற்கு தடை விதித்தது போலாகும், மதம் மாறுவதற்கு முன்பாக யாரும் அனுமதி கோரி அதிகாரிகளை அணுக மாட்டார்கள் என அவர் வாதிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, “திருத்தத்திற்கு முன்பு திருமணம் என்ற சொல் பிரிவு 3ன் கீழ் இல்லை, ஆனால் தற்போது அது சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரிவு 5ன் படி அனுமதி தேவைப்படுகிறது. எனவே நாங்கள் திருமணம் தொடர்பாக பிரிவு 5ஐ செயல்படுத்த தடைவிதித்தோம். ஒட்டு மொத்தமாக பிரிவு 5ஐ தடை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.