Aran Sei

கொரோனா பரிசோதனை மற்றும் இறப்பு விவரங்களை வெளியிட  வேண்டும் – குஜராத் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

குஜராத் மாநிலத்தில் பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும் என குஜராத் அரசிற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக பதிந்த வழக்கின் விசாரணையின்போது, அரசு சமர்பித்த கொரோனா தொற்று எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி பார்கவ் காரியா அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வழங்கிய உத்தரவில், கொரோனா நோயால் உயிரிழந்த நோயாளிகள் மற்றும் பிற நோய்களின் தாக்கத்தால் உயிரிழந்த நோயாளிகளின் எண்ணிக்கையை வெளியிடுமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாக தி இந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அவசரநிலையை நோக்கி நகரும் குஜராத் – தன்னிச்சையாக வழக்கு பதிந்த உயர்நீதிமன்றம்

கொரோனா பரிசோதனைகள் மற்றும் தொற்று உறுதி செய்யபட்டது தொடர்பாக அரசு பகிர்ந்து கொண்ட தரவுகள் துல்லியமாக இல்லை என்ற பொதுவான கருத்தாக்கத்தை மக்களின் மனதிலிருந்து அகற்ற வெளிப்படைத்தன்மை தேவை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”கொரோனா கண்டறியும் பரிசோதனையான பிசிஆர் மற்றும் தொற்று உறுதி குறித்த விவரங்களை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும், இந்தப் புள்ளிவிவரங்கள் திருத்தப்படவில்லை என்றால், இவற்றை வெளியிடுவதில் அரசு தயக்கப்பட தேவையில்லை” என நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

குஜராத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: பாஜக தலைவருக்கு எப்படி கிடைத்தது 5000 தடுப்பூசிகள்? – காங்கிரஸ் கேள்வி

கொரோனா செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கோரியுள்ள நீதிமன்றம், உண்மையான விவரங்களை வெளியிடாமல் இருப்பதால் அரசுக்கு எந்த நன்மையும் இல்லை என கூறியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’துல்லியமான விவரங்களை மறைப்பது’ மக்களிடையே அச்சம், நம்பிக்கை இழப்பு, பீதி உள்ளிட்ட கடுமையான பிரச்னைகளை உருவாக்கும் என அவர்கள் தெரிவித்திருப்பதாக தி இந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்