Aran Sei

மாடுகள் மீது அக்கறை காட்டப்படுவதைப் போல குழந்தைகள், பெண்கள் மீது காட்டப்படுகிறதா? – மாவட்ட நீதிபதிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி

மாடுகளுக்குக் காட்டப்படும் அதே அக்கறை குழந்தைகள் மற்றும் பெண்கள்மீது காட்டப்படுகிறதா என கிர்-சோம்நாத் மாவட்ட நீதிபதியைக் குஜராத் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கால்நடைகளை கொடுமைப்படுத்தியதற்காக குஜராத் சமூக-விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1985ன்(பிஏஎஸ்ஏ) கீழ் அஸ்பக் பஞ்ஜா கைது செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது.

”கால்நடைகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு  நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால் இது அக்கறை விலங்குகளுக்குக் காட்டப்படுகிறது… இதே போன்று மாவட்ட நீதிபதியின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள்மீது அக்கறை காட்டப்படுகிறதா?” என நீதிபதி பரேஷ் உபாத்யாய் கேள்வி எழுப்பினார்.

மேலும் இது தொடர்பாக ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு அவர் உத்தரவிட்டார்.

கால்நடைகளை கட்டி வைத்தல், கால்நடைகள் தண்ணீர் குடிப்பதை கடினமாக்குதல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கிர் சோம்நாத் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்பக் பஞ்ஜா மீது மிருகவதை (தடுப்பு)ச் சட்டத்தின் கீழ் 2 வழக்குகள் பதியப்பட்டன.

வழக்குகளை விசாரித்த மாவட்ட நீதிபதி, அஸ்பக் பஞ்ஜாவை பிஏஎஸ்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், அஸ்பக் பஞ்சம் மீது பதியப்பட்ட பிஏஎஸ்ஏ சட்டத்தை ரத்து செய்தத்தோடு அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.

மேலும், ”தற்போது வழக்கில் கால்நடைகளை பாதுகாப்பதில் மாநில அரசின் சார்பாக காட்டப்பட்ட கவனிப்பு, அவரது அதிகார வரம்பிற்குள் உள்ள பகுதிகளிலும் இதே கவனிப்பு காட்டப்பட்டதா என்பது குறித்து பதிலளிக்க நீதிமன்றம் ஒரு அனுமதி வழங்கியுள்ளது. அத்தகைய பதிலை அடுத்த விசாரணைக்குள் தெரிவிக்கும் பட்சத்தில் அதை இறுதி தீர்ப்பு அளிக்கும்போது கவனத்தில் கொள்ளப்படும். அதுவரை மனுதாரர் பாதுகாக்கப்பட வேண்டும்.” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Source : The Wire

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்