Aran Sei

குஜராத் பள்ளிப்பாடத்திட்டத்தில் பகவத் கீதை – காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வரவேற்பு

குஜராத் மாநிலத்தில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பகவத் கீதை இணைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருப்பதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சட்டப்பேரவையில், கல்வித்துறைக்கான  நிதி ஒதுக்கீடுகுறித்த விவாதத்தின்போது பேசிய மாநில கல்வி அமைச்சர் ஜிது வகானி, 2022-23 கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் உள்ள 6 முதல் 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதை இணைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 2)

ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் கீழ், பகவத் கீதையில் பொதிந்துள்ள மதிப்புகள் மற்றும் கொள்கைகளை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பகவத் கீதையை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், நவீன மற்றும் பண்டைய கலாச்சாரம், மரபுகள், அறிவார்ந்த விசயங்கள்குறித்து அறிந்து கொள்ள மாணவர்கள் இந்தியாவின் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சாரம் குறித்து பெருமை அடைவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வகானி, பண்டைய இந்து வேதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள தார்மீக மதிப்புகள் மற்றும் கொள்கைகளை அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

பள்ளி பாடத்திட்டத்தில், பகவத் கீதையை சேர்க்கும் குஜராத் அரசின் முடிவைக் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வரவேற்றுள்ளன.

Source: The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்