Aran Sei

பன்மடங்கு விலையில் அதானி, டாடா நிறுவனங்களிடம் மின்சக்தியை கொள்முதல் செய்யும் குஜராத்: காங்கிரஸின் கேள்விக்கு குஜராத் அரசு பதில்

ளர்ந்து வரும் சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனங்கள், ஒரு  யூனிட் மின்சாரத்தை ரூ .1.99 க்கு விற்பனை செய்யத் தயாராக இருந்த போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளில், பாஜக தலைமையிலான குஜராத் அரசானது அதானி, டாடா உட்பட தனியார் மின் உற்பத்தி நிருவனங்களிடம் இருந்து யூனிட் ரூ .9.13 தொடங்கி, ரூ .15 வரையிலான விலையில் 620 கோடி யூனிட் சூரிய மின்சக்தியை வாங்கியுள்ளது.

அண்மையில் முடிவடைந்த குஜராத் மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், காங்கிரஸ் உறுப்பினர் மோகன்சின் ரத்வா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி, 2020 ஆம் ஆண்டு மார்ச் வரை குஜராத் சூரிய சக்தி கொள்கை, 2009-ன் கீழ் மொத்தம் 61 தனியார் நிறுவனங்களிடம் இருந்து சூரிய மின்சக்தியை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் உலக பணக்காரர்களை முந்திய அதானி – ப்ளூம்பெர்க் நிறுவனம் தகவல்

அவற்றுள், 38 தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் சூரிய மின்சக்தி மின்சாரம் ரூ .15-க்கும், மீதமுள்ள 23 நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ .9.13 தொடங்கி ரூ .13.59 வரை குஜராத் அரசு வாங்கியுள்ளது.

இந்த ஐந்தாண்டுகளில் வாங்கப்பட்ட 620 கோடி யூனிட் சூரிய மின்சக்தி மின்சாரம் தவிர, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் வரை அதே 61 தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதலாக 57.3 கோடி யூனிட் சூரிய மின்சக்தி  மின்சாரத்தை வாங்கியுள்ளது.

விமான நிலைய தனியார் மயமாக்கலில் அதானி ஆதிக்கம் – மத்திய அரசு உடந்தையா?

இந்த ஐந்தாண்டு காலத்தில், அதிகபட்ச 32.8 கோடி யூனிட் சூரிய மின்சக்தி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ .15 க்கு அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், அதானி குழுமத்திடமிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தின் அளவானது 10.2 சதவீதம் உயர்ந்துள்ளது.

டாடா நிறுவனத்திடம் இருந்தும் 21 கோடி சூரிய மின்சக்தி மின்சார யூனிட்டுகள், யூனிட்டுக்கு ரூ.15-க்கு பாஜக ஆளும் குஜராத் அரசால் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்