Aran Sei

பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கான நிதியைக் குறைக்கும் பாஜக அரசு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

குஜராத்தில் ஆளும் பாஜக அரசு சிறுபான்மையினருக்கான நிதியைக் குறைத்து வருவதாகக் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தாரியாபூர் சட்டமன்ற உறுப்பினர் கயாசுதீன் ஷேக் குற்றம்சாட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத் சட்டசபையில் சமூகநீதித்துறை குறித்த உரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் ஆணையத்தில் நிரப்பபடாத பணியிடங்கள்: மத்திய அரசு விளக்கமளிக்க டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு

குஜராத் சட்டசபையில் உரையாற்றிய கயாசுதீன் ஷேக்,”இந்த ஆண்டு சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி 71.61 கோடியாகும். இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட 32 கோடி குறைவாகும்” என்று குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுபான்மையினருக்கான நிதிகுறித்து பேசிய கயாசுதீன் ஷேக்,
“சிறுபான்மையினரின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் பட வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஈழத்தமிழருக்கும் சிறுபான்மையினருக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி’ – ஸ்டாலின் குற்றச்சாட்டு

“ 2019-20 ஆண்டில் ஒதுக்கப்பட்ட 65.16 கோடியில் 12.94 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை என்றும், இதேபோல 2020-21 ஆண்டில் ஒதுக்கப்பட்ட 104.36 கோடியில் 76.80 கோடி செலவிடப்படவேயில்லை என்றும் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

’சிறுபான்மையினர் மீது வன்மம்; பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையடைக்க வேண்டும்’ -வைகோ

சிறுபான்மையினர் நலன்குறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் கயாசுதீன் ஷேக் , இஸ்லாமிய புனித யாத்திரைக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும் எனவும், மதரசா கல்வி அரசு பள்ளிகளில் வழங்க, அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்