Aran Sei

‘வறட்சி மற்றும் வெள்ளத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை’ – குஜராத் மாநில பாஜக அரசு

குஜராத்தில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சி மற்றும் கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை என்று பாஜக தலைமையிலான குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அம்மாநில அரசு இப்பேரழிவுகளுக்கு நிவாரணமாக மொத்தம் ரூ .10,609.78 கோடி நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து கோரியிருக்கிறது.

விளம்பரத்திற்கு 8 கோடி, உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லையா – பஞ்சாப் முதல்வர் கேள்வி

நேற்று (மார்ச் 30), குஜராத் சட்டபேரவையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் பகபாய் பரத், இரண்டு ஆண்டுகளில், மாநிலத்தில் வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்பட்ட போது, குஜராத் அரசானது மத்திய அரசிடமிருந்து எவ்வளவு நிதி உதவியை கோரியிருக்கிறது என்றும் அதில் எவ்வளவு நிதியுதவியை பெற்றது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இக்கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் கௌசிக் படேல்,  “2018-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சிக்கு, குஜராத் மாநில அரசு மத்திய அரசிடமிருந்து மொத்தம் ரூ .3,370.31 கோடி நிதி உதவி கோரியது. 2020-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ .7,239.47 கோடி நிதி உதவி கோரியது.” என்று பதிலளித்துள்ளார்.

ரத்து செய்யப்பட்ட 3 கோடி குடும்ப அட்டைகளும், பட்டினிச் சாவுகளும் – உச்சநீதிமன்றம் அதிர்ச்சி

மேலும், வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு இதுவரை எந்த நிதியும் தரவில்லை என்றும் வெள்ள நிவாரணம் கோரி எழுதப்பட்ட கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்