இந்தியாவில் பெரும்பான்மையாக இந்துக்கள் இருக்கும் வரையே அரசியலமைப்பு, சட்டங்கள், மதச்சார்பின்மை ஆகியவை இருக்குமென குஜராத் மாநில துணை முதலமைச்சர் நிதின் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்துக்கள் சிறுபான்மையினராக மாறிவிட்டால் அரசியலமைப்பு, சட்டங்கள், மதச்சார்பின்மை ஆகியவை இந்த நாட்டில் எங்கும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “அரசியலமைப்பு, சட்டம் மற்றும் மதச்சார்பின்மை குறித்து யாரெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளபோது மட்டுமே பேச முடியும்” என்று நிதின் படேல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஒருவேளை இன்னும் 1,000-2,000 வருடங்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து, பிற மதத்தினரின் எண்ணிக்கை உயர நேர்ந்தால் நீதிமன்றங்கள், மக்களவை, அரசியலமைப்பு, மதச்சார்பின்மை போன்ற எதுவுமே இருக்காது. அவை எல்லாம காற்றில் மறைந்துவிடும்” என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டும்மல்லாது, “நான் அனைவரைக் குறித்தும் பேசவில்லை. ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான இஸ்லாமியர்களும்,கிறித்தவர்களும் தேசப்பற்றவர்களாக உள்ளனர். ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்திய ராணுவத்திலும், நூற்றுக்கணக்கானோர்கள் குஜராத் காவல்துறையிலும் உள்ளனர். அவர்கள் தேசப்பற்றுக்கொண்டவர்கள். நான் அவர்களைக் குறித்து பேசவில்லை” என்றும் நிதின் படேல் குறிப்பிட்டுள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பு ஒருங்கிணைத்த பாரத மாதா சிலை வைக்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்
source: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.