Aran Sei

குஜராத் கலவர வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீஸ்தா செடல்வாத், ஆர்.பி. ஸ்ரீகுமார் பிணை மனு – தள்ளுபடி செய்து குஜராத் நீதிமன்றம் உத்தரவு

Credit: The Wire

குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவர தொடர்பான வழக்கில் அப்பாவி மக்களை சிக்க வைக்க சதி செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாத் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி ஆர்.பி. ஸ்ரீகுமாரின் பிணை மனுவை அகமதாபாத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மனுவை விசாரித்த கூடுதல் முதன்மை அமர்வு நீதிபதி டி.டி. தாக்கர், “சாட்சியங்களின் வாக்குமூலத்தை ஆராயும்போது, குற்றம்சாட்டப்பட்ட மூவரும் அப்போதைய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரத்துவத்திற்கு  எதிரான சதியில் தீவிரமாக ஈடுபட்டது தெரிகிறது.”என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவர வழக்குகளை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவிடம், 2006 ஆம் ஆண்டில் ஜகியா ஜாஃப்ரி  அளித்த புகார் செதல்வாட்டின் தூண்டுதலினால் வழங்கப்பட்டது தெரிகிறது என்று நீதிபதி தாக்கர் கூறியுள்ளார்.

”இரு தரப்பினரின் வாதம் மற்றும் அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை கருத்தில் கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக விருப்புரிமையைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது என்று நீதிமன்றம் கருதுகிறது” என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது – விளக்க கேட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடிதம்

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக மோசடி) மற்றும் 194 (மூலதன குற்றத்திற்கான தண்டனையைப் பெறும் நோக்கத்துடன் தவறான சாட்சியங்களை வழங்குதல் அல்லது இட்டுக்கட்டுதல்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (எஃப்.ஐ.ஆர்) அடிப்படையில் செதல்வாட் மற்றும் ஸ்ரீகுமாரை அகமதாபாத் குற்றப் பிரிவு ஜூன் 25 அன்று கைது செய்தது.

இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது பிரமாணப் பத்திரத்தில், நரேந்திர மோடி தலைமையிலான அப்போதைய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கத்தை சீர்குலைக்க மறைந்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் உத்தரவின் பேரில் செதல்வாட் மற்றும் ஸ்ரீகுமார் ஆகியோர் நடத்திய பெரிய சதியின் ஒரு பகுதியாக இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு படேலின் உத்தரவின் பேரில் செடல்வாட்டுக்கு ரூ. 30 லட்சம் வழங்கப்பட்டதாக அது குற்றம் சாட்டியுள்ளது.

மனித உரிமை செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட், பத்திரிகையாளர் ஜூபைர் கைது – நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரேசா கண்டனம்

ஸ்ரீகுமார் ஒரு “அதிருப்தியடைந்த அரசாங்க அதிகாரி” என்றும், அவர் “குஜராத் மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அதிகாரத்துவம் மற்றும் காவல்துறை நிர்வாகத்தை உள்நோக்கத்துடன் திட்டியதற்காக இந்த செயல்முறையை துஷ்பிரயோகம் செய்தார்” என்று எஸ்ஐடி கூறியுள்ளது.

மற்றொரு காவல்துறை முன்னாள் அதிகாரியான சஞ்சீவ் பட்டும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே ஒரு காவல் மரண வழக்கில் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையென மும்பை பிரஸ் கிளப் கண்டனம்

இஸ்லாமியர்களுக்கு எதிரான குஜராத் கலவரத்தில் மோடியின் பங்குகுறித்து விசாரணை மேற்கொள்ள கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பியின் எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு அடுத்த நாள் தீஸ்தா செதல்வாத், ஆர்.பி. ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Source: The Wire

உண்மை வெளிவர Kallakurichi GH CCTV Footages வெளியிடப்படணும் VCK Dravida Mani | Sakthi School Issue

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்