Aran Sei

சிமி வழக்கு: ஒரு குற்றமும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் விடுதலை

ட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்ட 122 பேரை குஜராத் நீதிமன்றம் விடுவித்துள்ளதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில், கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (சிமி) நடத்திய கருத்தரங்கில் கலந்துக் கொண்டதாக குஜராத், தமிழகம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கர்நாடகம், உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 127 பேரை சூரத் காவல்துறை கைது செய்தது.

இவர்கள்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு பிரிவுகளில் (தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருந்தது, கருத்தரங்குகள் நடத்தி இயக்கத்தை ஊக்குவித்தது, இயக்கத்தின் நடவடிக்கையை விரிவுப்படுத்தியது) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தலித்துகளின் திருமணத்தின் போது நடக்கும் வன்முறை சம்பவங்கள் – முன்னெச்சரிக்க நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ள குஜராத் அரசு

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சிமியைச் சார்ந்தவர்கள் இல்லை எனவும் அனைத்து இந்திய சிறுபான்மையினர் கல்வி வாரியம் நடத்திய நடத்திய கருத்தரங்கில் கலந்துக் கொள்ள வந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

ராகுல் மன்னிப்பு கோரியது போல், குஜராத் கலவரத்திற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்கட்சிகள்

”இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் எந்த ஒரு குற்றமும் செய்யாமல், கடந்த 20 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளனர்” என குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எம். ஷேக் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

குஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.என். தவே, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கமான சிமியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தினார்கள் எனவும் நிரூபிக்க நம்பதகுந்த ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கவில்லையெனக் கூறி, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் அனைவரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டுள்ளதாக தி இந்துவின் செய்தி கூறியுள்ளது.

குஜராத்திலும் மத மாற்றத் தடைச் சட்டம் – அடுத்த மாதம் கொண்டுவரப்படும் என அறிவிப்பு

இந்த வழக்கில் 127 பேர் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், சிறையிலேயே 5 பேர் மரணமடைந்த விட்டதால் மீதமிருக்கும் 122 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்