Aran Sei

குஜராத்தில் இருசாதியினர் இடையே மோதல்: 2,000 பேர் மீது வழக்குப்பதிவு- 7 காவலர்கள் காயம்

குஜராத் மாநிலம் நவ பந்தர் கிராமத்தில், இரு மீன்பிடி படகுகள் மோதிக்கொண்ட விவகாரத்தில் ஏற்பட்டத் தகராறில் இருசாதியினரிடையே நடந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட அடையாளம் தெரியாத 2000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கலவரத்தில் 7 காவல்துறையினர் உட்பட எண்ணற்றோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது புகார்: போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முன்னாள் மாணவர்கள் வேண்டுகோள்

நவ பந்தர் கிராமத்தில் ஒரே பகுதியில் மீன்பிடித்த இரண்டு படகுகள் மோதிக்கொண்டதை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு கொடூரமான ஆயுதங்களால் தாக்கிக்கொண்டதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றக் காவல்துறையைக் கலவரக்காரர்கள் தாக்கியதாகவும், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிக் கலவரத்தைக் கட்டுப்படுத்தியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

கொரோனாவால் இறந்தவர்களின் உடலைக் கண்ணியத்தோடு நடத்தவேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தொண்டுநிறுவனம் மனு

இந்தக் கலவரம் தொடர்பாக அடையாளம் தெரிந்த 47 பேர் மற்றும் அடையாளம் தெரியாதா 1500 முதல் 2000 பேர்மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி), 332, 333 (அரசு ஊழியருக்குக் கடுமையான காயத்தை ஏற்படுத்துவது), 337, 338 (கவனக்குறைவான செயலால் மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்), 143 (சட்டவிரோத கூட்டம்கூடுதல்), 147 மற்றும் 148 (கலவரம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்