Aran Sei

‘இந்து கடவுள்களை தவறாக சித்தரிக்கும் காம சாஸ்திரம்’ – நூலை எரித்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள் போராட்டம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காம சூத்திரம் புத்தகத்தில் கிருஷ்ணர் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் இந்து தெய்வங்களை அவமதிப்பதாகவும் குற்றம் சாட்டி, பஜ்ரங் தள் அமைப்பின் உறுப்பினர்கள் காம சூத்திரம் புத்தகங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 28), இரவு, அகமதாபாத்தில் ராஜ்பத் கிளப் அருகே அமைந்துள்ள  லாட்டிட்யூட் புத்தகக் கடைக்குள் நுழைந்த பத்திற்கும் மேற்பட்ட பஜ்ரங் தள் உறுப்பினர்கள் உத்ஸவ் பட்டாச்சார்யாவின் காம சூத்ரா க்ராப்பிக் புத்தகங்களை எடுத்து கடை வாசலில் வைத்து எரித்துள்ளனர்.

புத்தகக் கடையின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட காணொளியில், பஜ்ரங் தள் உறுப்பினர் ஒருவர் காம சூத்திரம் புத்தகத்தை சுட்டிக்காட்டி, இப்புத்தகத்தில் இந்து கடவுள் ‘மோசமான முறையில்’ வரையப்பட்டுள்ளது என்றும் கிருஷ்ணர் மற்றும் ராதாவை தவறாக சித்தரிக்கிறது என்றும் குற்றச்சாட்டியுள்ளனர்.

பின்னர், புத்தகக் கடையிலிருந்து வெளியே வந்தவர்கள், அப்புத்தகங்களை தீ வைத்து எரித்துள்ளனர். அவர்கள் புத்தகங்களை எரிக்கும் போது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும், ‘ஹர ஹர மகாதேவ்’ என்றும் முழக்கமிட்டுள்ளனர்.

இதுபோன்ற புத்தகங்களைத் தொடர்ந்து விற்பனை செய்து வந்தால், அந்தக் கடையை எரித்துவிடுவதாக கூறி கடை உரிமையாளரை அக்குழுவினர் மிரட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக, பஜ்ரங் தள் உறுப்பினர்களோ அல்லது புத்தகக் கடை ஊழியர்களோ காவல்துறையை அணுகவில்லை.

காதலையும் கலவியையும் பற்றிய காம சூத்திரம் புத்தகமானது பண்டையகால இந்திய தத்துவஞானியான வாத்ஸ்யாயனாரால் எழுதப்பட்டது.

Source: Scroll.in

தொடர்புடைய பதிவுகள்:

கற்கை நன்றே காமம் – குறுநகை

சி.பி.எஸ்.இ. பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர்: ’சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும்’ – வைகோ கண்டனம்

இஸ்லாமியரை தாக்கியவர்களை விடுவிக்கக்கோரி பஜ்ரங்தள் போராட்டம் – காவல்நிலையத்திலிருந்து மூவர் விடுவிப்பு

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்