Aran Sei

செய்தி நிறுவனங்களின் இணையதளங்கள் செயலிழப்பு – பெரும் நிறுவனங்களே காரணமென பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு

தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ப்ளூம்பெர்க் நியூஸ், போன்ற எண்ணற்ற செய்தி நிறுவனங்களின் இணையதளங்கள், நேற்றைய தினம் செயலிழந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘திராவிட மொழிகளில் உள்ள கல்வெட்டுகளின் ஆய்வுகள் புறக்கணிக்கப்படுகிறதா?’ – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் கேள்வி

மேலும், இந்த இணையதள முகவரிகளில் “பிழை 503 சேவை கிடைக்கவில்லை” என்று செய்தி மட்டுமே தெரிவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள, பிரிட்டனை மையமாக இயங்கும் பதிப்பகம் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “தி கார்டியன் செய்தி நிறுவனத்தின் செயலி மற்றும் இணையதளம் ஆகிய இரண்டும் செயலிழந்துள்ளது,விரைவிலேயே சரிசெய்யப்படும் ” என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேபோன்று, ரெடிட், பிபிசி நியூஸ், பஸ்பீட், வோக்ஸ் மீடியா மற்றும் அமேசான் ஆகிய இணையத்தளங்களும் செயலிழந்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

இதுகுறித்து தெரிவித்துள்ள தி கார்டியன் நிறுவனத்தின் ஆசிரியர் அலெக்ஸ் ஹர்ன் ,இந்த செயலிழப்பு அமெரிக்காவைச் சார்ந்த பெரும் கிளவுட் தளம் எண்ணற்ற நிறுவனங்களுக்கு இணைப்பு வழங்கியதாலே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும்  தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வேட்புமனுவை திரும்பப் பெற பாஜக தலைவர் மிரட்டியதாகப் புகார்: கிரிமினல் வழக்கு பதிந்த கேரள காவல்துறை

மேலும்,”இணைய வைரசால் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது என்பதற்கான   முகாந்திரம் இல்லை, இந்த செயலிழப்புக்கு, இணையக்கட்டமைப்புகள் குறிப்பிட்ட பெரிய நிறுவனங்களின் கைகளுக்கு ஒருமுகப்படுத்தப்படுவதே காரணம்” என்று அலெக்ஸ் ஹர்ன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்