Aran Sei

துணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி உயர்வு நிறுத்திவைப்பு – தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் எதிர்த்ததால் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு

துணிகளுக்கான ஜி.எஸ்.டி வரியை 5% லிருந்து 12% ஆக உயர்த்தும் முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் துணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி உயர்த்தும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை இன்று (31.12.2021) ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 46வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் அடுத்து நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் துணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ​​செயற்கை இழைகளுக்கு 18%, ​​செயற்கை இழையினால் செய்யப்பட்ட நூலுக்கு 12%, துணிகளுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது.

2022 ஜனவரி 1, முதல் அனைத்து விலையிலான காலணிகளுக்கும் ஜி.எஸ்.டி வரியை 5% லிருந்து 12% ஆக உயர்த்தவும், பருத்தியிலான துணிகளைத் தவிர மற்ற அனைத்து துணிகளுக்குமான ஜிஎஸ்டி வரி 5% லிருந்து 12% ஆக உயர்த்தப்படும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்திருந்தது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்