சரக்கு மற்றும் சேவை வரி-ஜிஎஸ்டியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது. தான் கொடுத்த வாக்குறுதிகளை ஜிஎஸ்டி நிறைவேற்றத் தவறிவிட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முதுகெலும்பான தகவல் தொழில்நுட்பம் இன்னும் அமைக்கப்படவில்லை. எதிர்பார்க்கப்பட்டதை விட மிகக் குறைவாகவே அதன் அதீத வரி வருவாய் உள்ளது. மேலும் கோவிட் தொற்று அதன் பற்றாக்குறையை மேலும் ஊதிப் பெருக்கிவிட்டது. அது தரவேண்டிய இழப்பீட்டைத் தருவது தாமதமாவதுடன் நிலுவையாகவும் உள்ளது. தற்போது இழப்பீட்டு உத்தரவாத காலம் முடிவடையும் நிலையில் இருப்பதால் பெரும்பாலான மாநிலங்கள் திடீர் வருவாய் வீழ்ச்சி மற்றும் தவிர்க்கமுடியாத நிதி நெருக்கடியை நோக்கி நகர்ந்துக் கொண்டுள்ளன.
இந்தப் பிரச்சனைகள் குறித்த விவாதம் போதுமான அளவு இல்லை. ஜிஎஸ்டி குழு கடந்த ஆறு மாதங்களாக கூடவே இல்லை. இறுதியாக அது கூடியபோது சில அனுபவமிக்கவர்கள் அதன் ஜனநாயக விரோத நடைமுறையை வெளிப்படையாக புகார் கூறினர். கட்சி கூட்டணிகளுக்கிடையிலான சீரழிந்த விவாதங்களே நடந்தன. முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ஒருவர் ஜிஎஸ்டிக்கு இரங்கற்பா எழுதும் நேரம் கூட வரலாம் என அஞ்சினார்.
மேகேதாட்டுவில் அணை என்பது தமிழகத்தை சுடுகாடாக்கும் செயல் – சூர்யா சேவியர்
ஜிஎஸ்டியுடனான அனுபவத்தின் விரிவான மறுஆய்வு மேற்கொள்ள வேண்டிய நேரமிது. சிறிய அளவிலான பட்டிப்பார்க்கும் வேலை நடக்காது என நான் நம்புகிறேன். கூட்டாட்சி குறித்த கவலைகளை கவனத்தில் கொள்ளும் வகையில் அதாவது அதீத வருவாய் பற்றிய அதன் உத்தரவாதம் மற்றும் ஜிஎஸ்டி குழு உண்மையில் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கான நிறுவனமாக இருப்பது போன்றவற்றில் அதன் கட்டமைப்பிலேயே சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
கூட்டாட்சி நெகிழ்வுத்தன்மை
ஜிஎஸ்டி அறிமுகம் குறித்த மாநில நிதி அமைச்சர்களின் அதிகாரமளிக்கப்பட்ட குழுவில் (EC) நடந்த ஆரம்ப விவாதங்களை இங்கே நான் நினைவுபடுத்துகிறேன். மூன்று இடதுசாரி ஆதரவு நிதி அமைச்சர்கள் மாநில உரிமை குறித்த புதிய வரி ஆட்சியின் உட்பொருள் பற்றிய கவலையைப் பகிர்ந்துக் கொண்டனர். சீரான மாநில மதிப்புக் கூட்டு வரியை (VAT) அறிமுகப்படுத்தியது, அதனை மேற்பார்வையிடுவதை அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் கட்டாயமாக்கியது தனிப்பட்ட சுயாட்சியை குறைத்து விட்டது. ஆனால் வரி விகிதங்கள் தொடர்பான சில வழிவகைகள் தொடர்ந்து இருக்கின்றன.
கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி
ஜிஎஸ்டி, மாநிலங்களின் நேர்முக வரிகள் மற்றும் ஒன்றிய அரசின் சேவை மற்றும் சுங்க வரிகளை உட்கொண்ட தேசிய அளவிலான மதிப்புக் கூட்டு வரிக் கொள்கையின் நீட்சியாகப் பார்க்கப்பட்டது. ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து ஜிஎஸ்டியை நிர்வாகம் செய்யும். ஒவ்வொரு விற்பனை விலைப்பட்டியிலும் (invoice) ஒன்றிய ஜிஎஸ்டி மற்றும் மாநில ஜிஎஸ்டி ஆகியவைத் தனித்தனியாக குறிப்பிடப்பட்டு அவ்வகையில் வசூலிக்கப்பட்ட வரிகள் ஒன்றிய, மாநில அரசு கணக்கில் செலுத்தப்படு கின்றன. மாநிலங்களுக்கிடையிலான வர்த்தகத்தில் விதிக்கப்படும் ஐஜிஎஸ்டி தனியாக வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறையில் மாநில ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மீது எந்த நேரடியான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
எனவே ஒரு குறுகிய வளையத்தில் மாநிலங்களை அவர்கள் விரும்பும் ஒரு குறிப்பிட்ட மாநில ஜிஎஸ்டியை தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிப்பது, ஜிஎஸ்டியின் அடிப்படை கட்டமைப்பையோ, உள்ளீட்டு கடன் சங்கிலியையோ பாதிக்காது. மதிப்புக் கூட்டு வரி நாடு முழுவதும் சீரான வரி விகிதத்தை அறிமுகப்படுத்தி இருந்தாலும், நடைமுறையில் மாநிலங்களுக்கிடையே சிறிய வேறுபாடுகளும் உள்ளன. இந்த நெகிழ்வு ஜிஎஸ்டியால் ஈடுகட்டப்படும் என்ற பொதுவான புரிதல் உள்ளது.
எதிர்ப்பிற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான “மெல்லிய கோடு” – பத்ரி ரெய்னா
இயற்கைப் பேரிடர் போன்ற சமயங்களில் மாநிலங்கள் சிறப்பு மேல் வரியை (cess) குறிப்பிட்ட காலவரையறைக்கு, அதுவும் ஜிஎஸ்டி குழுவின் அனுமதியுடன் விதிக்கலாம் என்பது மட்டுமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள ஒரே ஒரு நெகிழ்வு. இதுவரை கிடைத்துள்ள அனுபவத்திலிருந்து நோக்கினால், இந்த சூழ்நிலைகளை மறுபார்வைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் ஓரளவு கூட்டாட்சி நெகிழ்வு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
விகிதாச்சார பகிர்வு பிரச்சினை
ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையே ஜிஎஸ்டியை பகிர்ந்துக் கொள்வதற்கான விகிதாச்சாரம் அடுத்த முக்கிய பிரச்சனை ஆகும். அதிகாரமளிக்கப்பட்ட குழுக் கூட்டத்தில் பேசிய பல மாநிலங்களும் ஜிஎஸ்டியில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கான விகிதம் 60:40 ஆக இருக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்தன. இந்திய அரசின் வருவாய் நடுநிலை விகிதக் குழுவின் அப்போதைய தலைவரான தலைமை பொருளாதார ஆலோசகர் அங்கீகரித்ததே இதற்கான தர்க்கம் ஆகும்.
இருப்பினும், மாநிலங்களுக்கு எதிரானதாக, ஒன்றிய, மாநிலங்களுக்கிடையே சம பங்கீடு என்ற வகையில் 50:50 என முடிவு எடுக்கப்பட்டது. இதனால் இப்போது பெரும்பாலான பொருட்களுக்கு மதிப்புக் கூட்டு வரி மூலம் 14.5 % வருவாய் பெற்ற மாநிலங்கள், 18% ஜிஎஸ்டி மூலம் 50:50 என்ற அடிப்படையில் 9% மட்டுமே பெறுகின்றன. இதுவும் கூட, சிஎஸ்டி மற்றும் ஒன்றிய சுங்க வரி இல்லாத தளத்தில் மட்டுமே செல்லுபடியாகும்.
இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்
நடுநிலைமையான விகிதத்தில் வருவாய்?
குழுக்களின் விரிவான விவாதங்களுக்குப் பின்பே ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. கெடு வாய்ப்பாக, தேர்தல் சமயங்களில் தற்காலிக முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் விகிதங்கள் குறைக்கப்பட்டு தற்போதைய இனியும் விகிதாச்சார சமநிலை இல்லை என்ற நிலை உருவாகியது. முக்கிய வரி வீதங்கள் 5, 12,18 மற்றும் 28 ஆகும். இதுதவிர வரியற்ற பொருட்கள், தங்கத்திற்கு 3% மற்றும் விலையுயர்ந்த உலோகங்களுக்கு 0.25% என்ற வரி வீதங்களும் உள்ளன. துவக்கத்தில் 18%என்பது நிலையான ஜிஎஸ்டி யாக இருந்தது. தற்போது, பெரும்பாலும் 80% ற்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு முறையே 18 மற்றும் 12% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாம் ஏற்கனவே கண்டபடி மாநிலங்களின் நிலையான விகிதங்கள் மதிப்புக் கூட்டு வரிக் காலத்தை ஒப்பிடுகையில் வெகுவாக குறைந்து விட்டது. ஒன்றிய அரசு வேறுபல நேர்முக மற்றும் சுங்க வரிகளை இன்னும் வைத்துள்ளது. இது மாநிலங்களுக்கு சாத்தியமற்றது. பெட்ரோலிய பொருட்களுக்கான வரியை குழு விரும்பினால் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முடியும்.
எனவே நிலையான வரி வீதத்தின் குறைவால் மாநில அரசுகள் நிரந்தரமாக முடமாக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள பலவீத ஜிஎஸ்டியை ஒன்று சேர்த்து ஒரே வீதத்தை புகுத்துவது என்ற கவர்ச்சியான வாதம் நிறைவேற்றப்பட்டால் ஜிஎஸ்டி வரி வசூல் மேலும் மோசமடையும
விகிதங்களில் முற்போக்குத்தன்மையின் தேவை
ஒற்றை வரிவீத முறையை நோக்கி நகர்ந்தால், ஜிஎஸ்டி மற்றொரு வகையில் பிற்போக்கான மறைமுக வரியின் முற்போக்குத் தன்மை போன்ற தோற்றத்தைக் கூட இழந்துவிடும். நுகர்வோர் நீடித்தப் பொருட்கள் மற்றும் நகர்புற தயாரிப்புகள் மீதான வரி வீதங்கள்தான் ஒரு காலத்தில் அவை மிகவும் வீழ்ச்சியடைவதற்கு காரணமாகக் காணப்பட்டன. அதிகபட்ச வரி விகிதம் 18% என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டால் இதே பொருட்கள் மேலும் லாபமடையும். விகிதங்களின் பெருக்கத்தால் எழும் சிக்கல் மிகைப்படுத்தப்படுகிறது. வரி அமைப்பு எந்த அளவு எளிமைப் படுத்தப்பட்டுள்ளது என்பது ஜிஎஸ்டிக்கு முன்பிருந்த வரிக் கட்டமைப்பை பற்றி சிந்தித்துப் பார்த்தால் புரியும்.
பலவித வரி வீதங்கள் அல்ல மாறாக, ஜிஎஸ்டி நடைமுறையும் அடிக்கடி மேற்கொள்ளப்படும் மாற்றங்களுமே ஜிஎஸ்டியில் உள்ள குழப்பத்திற்குப் பொறுப்பாகும். நாட்டில் பெரும்பான்மையானவர்கள் வறுமையிலும், மிக உயர்ந்த அளவில் வருவாய் சமத்துவமின்மையிலும் இருக்கும் நிலையில், தானியங்கள்,மாவு, மற்றும் சொகுசு வாகனங்களுக்கு பொதுவான வரி விகிதத்தைக் பரிந்துரை செய்வது போலித்தனமானது. சமத்துவம் என்ற உயரிய நோக்கம், குறைந்தது வியாபாரத்தை எளிதாக்குவது போன்றே முக்கியமானதாக கருதப்பட வேண்டும்.
www.newindianexpress.com இணையதளத்தில் Dr. M. தாமஸ் ஐசக் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.