Aran Sei

ஜிஎஸ்டி! குதிரை பந்தயத்திற்கா? குதிரை பேரத்திற்கா? குழம்பிய நிர்மலா சீதாராமன் – எதிர்க்கட்சிகள் கிண்டல்

Image Credits: World Finance

குதிரைப் பந்தயத்துக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்பதற்கு பதிலாக குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கபடும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததற்கு இணைய வாசிகளும் எதிர்க்கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.

47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் நடைபெற்றது. முன்னதாக காஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பின்னர் சண்டிகருக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மை மக்களுக்காக போராடி வரும் டீஸ்டா செடல்வாட் மீதான பொய் வழக்கை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டும் – வைகோ கோரிக்கை

இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பேனா மை, கத்தி, பிளேடு, ஸ்பூன்களுக்கு ஜிஎஸ்டி வரி 12ல் இருந்து 18 சதவீதமாக கூட்டப்பட்டுள்ளது. கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. குதிரை பந்தயம், கேளிக்கைகள் (கேசினோ) மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

குதிரைப் பந்தயத்துக்கு ஜிஎஸ்டி விதிக்க்கபடும் என்பதற்கு குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கபடும் என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர்  நிர்மலா தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சியினர் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

உதய்பூர்: என் தந்தையின் கொலைக்கு காவல்துறை தான் காரணம் – கொல்லப்பட்ட கன்னையா லாலின் மகன்கள் குற்றச்சாட்டு

இதுகுறித்து காங்கிரஸின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா கூறும்போது, “நிர்மலா சீதாராமன்ஜிக்கு வாக்குப்பெட்டி வெளியே சிந்திக்கும் திறன் இருந்தது எனக்குத் தெரியும்” என்று பகடி செய்துள்ளார்.

காங்கிரஸின் ஊடகப் பிரிவு செயலாளர் வினீத் புனியா  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நிதியமைச்சரின் காணொளியைப் பகிர்ந்து, “குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கும் நிர்மலா சீதாராமன்ஜியின் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: indiatoday

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்