Aran Sei

அரசுக்கு எதிராக கருத்து தெரிப்பவர்களை கண்காணிக்க முடிவு – அதிர்ச்சியளிக்கும் தகவல்

ரசாங்கத்திற்கு எதிராக எழும் எதிர்மறை விமர்சனங்களை மட்டுப்படுத்துவதற்காக (Neutralize), ”அரசின் அறிவிப்புகளை” செலுமைப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, பல்வேறு யோசனைகளைத் தெரிவித்திருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில், ஆதாரமற்ற மற்றும் போலியான அல்லது தவறான செய்திகளைப் பகிர்பவர்களை மட்டுப்படுத்தும் வகையில், நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தலா 50 பேரை கண்காணிப்பது உட்பட பல்வேறு ஆலோசனைகளை அமைச்சர்கள் குழு வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் ஊடகங்களில் அந்நிய நேரடி முதலீட்டை 26 விழுக்காடாக நிர்ணயித்தல் மற்றும் புதிய தொழில்நுட்ப விதிகளில், ஓடிடி தளங்களைக் கையாளுவதற்கான நெறிமுறைகளை தனியாக உருவாக்குதல் ஆகியன அமைச்சர்கள் குழுவின் விவாதத்திற்குப் பிறகு, யோசனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளது என்று தி இந்து கூறுகிறது.

ஒடிடி தளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகின்றன – உச்ச நீதிமன்றம் கருத்து

இந்திய ஊடகங்களை வெளிநாட்டு நிறுவங்கள் கட்டுப்படுத்துவதை தவிர்க்க, அந்நிய நேரடி முதலீட்டு அளவை நிர்ணயிப்பது அவசியம் என அமைச்சர்கள் குழு கருதுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறை (IT) அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை (IB) அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, விளையாட்டுத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ ஆகியோர் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் குழு, கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதிவரை, ஆறு முறை கூடி விவாதித்ததாக, தி இந்து தெரிவித்துள்ளது.

இணைய முடக்க நடவடிக்கைகளில் இந்தியா முதலிடம்- “டிஜிட்டல் அக்செஸ் நவ்” அறிக்கை

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது பரிந்தரையில், “தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில், அரசின் சிந்தனைக்கு  ஆதரவான ஊடக பணியாளர்கள் மற்றும் முக்கிய நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். சில சிறந்த கல்வியாளர்கள், துணைவேந்தர்கள், ஓய்வுபெற்ற இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள் போன்றவர்களில், யார் அரசின் சாதனைகளை எழுத முடியும் மற்றும் அரசின் பார்வையை முன்வைக்க முடியும் என்பதை அடையாளம் காண வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளதாக தி இந்து குறிப்பிடப்படுள்ளது.

பாஜகவின் கடந்த அரசாங்கத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்த ஸ்மிதி இராணி, “நாம் (அரசாங்கம்) 50 எதிர்மறை மற்றும் 50 நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துபவர்களை கண்காணிக்க வேண்டும்” என்று பரிந்துரைத்ததை அரசு ஏற்றுக்கொண்டு அதைச் செயல்படுத்தும் பணியை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு வழங்கியுள்ளதாக, தி இந்து கூறியுள்ளது.

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ”பொது மக்களுடன் தொடர்புகொள்வதற்கு பிரதமர் மோடியிடமிருந்து அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்ததாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாழச் சிறந்த நகரங்களில் பெங்களுரு முதல் இடம் – சென்னைக்கு 4வது இடம்

அரசாங்கத்திற்கு எதிராக எழுதுபவர்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்த அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “அரசாங்கத்திற்கு எதிராக ஆதாரமற்ற மற்றும் போலியான அல்லது தவறான செய்திகளை எழுதுபவர்களைக் கையாள அரசாங்கத்திடம் ஒரு வழிமுறை இருக்க வேண்டும்” கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கும் ஊடகவியலாளர்கள், தற்போது அவர்கள் பணியில் இல்லை என்றாலும் அவர்களை ஆதரிக்க வேண்டும், என்ற ஹர்தீப் சிங் பூரியின் பரிந்துரையையும் அரசாங்கம் ஏற்றிருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள வலதுசாரி கட்சிகளுடன் பாஜக தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களுடன் ஒத்த கருத்திற்கு வந்து சேர வேண்டும் என்று கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்