Aran Sei

கார்ப்பரேட்களிடமிருந்து 720 கோடியை நன்கொடையாக பெற்ற பாஜக -ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

2019-20 நிதியாண்டில் தேசியக் கட்சிகளுக்கு கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்கள் ரூ.921.95 கோடி நன்கொடை அளித்துள்ளன. அதில் பாஜக அதிகபட்சமாக ரூ.720.407 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

4,847 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார கட்சியாக மாறிய பாஜக – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

பாரதிய ஜனதா கட்சி, இந்தியத் தேசிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 5 தேசிய கட்சிகளின் நன்கொடைகள்  குறித்த தகவல்கள் இந்த ஆய்வில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

2019-20 நிதியாண்டில் 2,025 கார்ப்பரேட் நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.720.407 கோடி நன்கொடைகளை பாஜக பெற்றுள்ளது. இந்தியத் தேசிய காங்கிரஸ் 154 நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.133.04 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 36 கார்ப்பரேட் நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.57.086 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.

2019-20 நிதியாண்டில் கார்ப்பரேட்களிடமிருந்து எந்த நன்கொடைகளையும் பெற வில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

பீகார் தேர்தல் – பாஜக 282 கோடி வசூல் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம்

2019-20 ஆம் ஆண்டில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிக்கும் ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் அதிக நன்கொடைகளை அளித்துள்ளது. பாஜகவிற்கு ரூ.216.75 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.31 கோடியும் என மொத்தமாக ரூ.247.75 கோடி நன்கொடையை ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் வழங்கியுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கான கார்ப்பரேட் நன்கொடைகளை 2019-20 நிதியாண்டில் தேசிய கட்சிகள் பெற்றுள்ளன என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

Source : NDTV

 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும்- முன்னாள் ஐஏஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்

விரிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்