Aran Sei

பெட்ரோலிய பொருட்களின் மீதான கலால் வரி – நான்கு மாதங்களில் 48 மடங்கு வரை அதிகரிப்பு

டப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் பெட்ரோலிய பொருட்கள்மீது வரியில் இருந்து அரசுக்கு கிடைத்த வருமானம் 48 விழுக்காடு உயர்ந்துள்ளது என்றும், இது அரசின் திருப்பிச் செலுத்த வேண்டிய எண்ணெய் கடன் பத்திரங்களின் தொகையைவிட மூன்று மடங்கு அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதியமைச்சகத்தின் கணக்கு கட்டுப்பாட்டு இயக்குநரிடம் இருந்து கிடைத்த தகவல்களின்படி, இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் கலால் வரிமூலம் ஒன்றிய அரசிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான தொகை வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் ரூ 67,895 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.

நிதியாண்டில் முதல் நான்கு மாதங்களில் கிடைத்திருக்கும் கூடுதல் வருவாய் ரூ. 32,492 கோடி, 2021-22 நிதியாண்டில் அரசு எண்ணெய் பத்திரங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகையான ரூ. 19 ஆயிரம் கோடியைவிட மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதால், பெட்ரோலிய பொருட்கள்மீதான வரிமூலம் அரசுக்கு கடந்த ஆண்டு கிடைத்த வருவாயைவிட இந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் அதிகமாக கிடைக்கும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோலிய பொருட்கள்மீதான மானியத்தை பணமாக கொடுக்காமல் கடன் பத்திரங்களாக கொடுத்ததால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சி அளிக்கப்பட்டிருத்த ரூ. 1.34 லட்சம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களில், ரூ. 3,500 கோடி மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது, எஞ்சிய 1.3 லட்சம் கோடி ரூபாயை 2025-26 ஆம் ஆண்டிற்குள் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், கலால் வரியைக் குறைக்கும் பேச்சிற்கே இடமில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் உண்மையில் அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை விட குறைந்தபட்சம் 3 மடங்கிற்கும் அதிகாமான வருமானம், பெட்ரோலிய பொருட்கள்மீதான கலால் வரியில் கிடைக்கிறது.

கடந்த நிதியாண்டில் மட்டும் பெட்ரோலிய பொருட்கள்மீதான வரி வருமானம் 88 விழுக்காடு வரை அதிகரித்து, 3.35 லட்சம் கோடியாக இருந்தது என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறைக்கான இணை அமைச்சர் ராமேஸ்வர் தெளி, நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை மாதத்தில் தெரிவித்தார்.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்