Aran Sei

விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசு – எஞ்சிய பங்குகளையும் விற்க முடிவு

கூடுதல் வளங்களைத் திரட்ட அடையாளம் காணப்பட்ட 2.5 லட்சம் கோடி பணமாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்ட டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் மீதமுள்ள பங்குகளைத் தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2021-22 நிதியாண்டில், விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) , நான்கு விமான நிலையங்களில் மீதமுள்ள பங்குகள், மேலும் 13 விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்செய்தியை அதிகாரமளித்தல் கமிட்டியின் செயலாளர்களின் ஆலோசனைகுறித்து அறிந்த இருவர்  கடந்த மாதம் தெரிவித்தனர்.

டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களை இயங்கும் ஏஏஐ நிறுவனத்தின் பங்குகளைத் திரும்பப் பெற, பயணிகள்  விமானப் போக்குவரத்து அமைச்சகம் தேவையான அனுமதிகளைப் பெறும் என அவர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரம் அடுத்த சில நாட்களில் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு செல்லக்கூடும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

கோயிலில் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவர் – #sorryAsif ஹேஷ்டாக் மூலம் சிறுவனுக்கு துணைநிற்கும் மக்கள்

13 ஏஏஐ விமான நிலையங்கள் தனியார்மயமாக்க அரசு பரிசீலித்துள்ளது. அவற்றில் இலாபகரமான மற்றும் இலாபமற்ற விமான நிலையங்களை ஆராயந்து, விற்பனைக்கான கவர்ச்சிகரமான திட்டங்கள் உருவாக்கப்படும்  எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முதல் சுற்றில், அதானி குழுமம் கடந்த ஆண்டு லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூர், திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற்று இருக்கிறது.

பயணிகள் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஏஏஐ, நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை சொந்தமாக நிர்வகித்து வருகிறது.

அமெரிக்காவிலும் தொடரும் சாதிவெறி – ஆட்டுடை தரித்த ஓநாய்கள்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில், 74 விழுக்காடு பங்குகள் அதானி குழுமத்திடமும், 26 விழுக்காடு பங்குகள் ஏஏஐ யிடமும் இருக்கிறன.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில், 54 விழுக்காடு பங்குகளை ஜி.எம்.ஆர் நிறுவனமும், 26 விழுக்காடு  பங்குகளை ஏஏஐ நிறுவனமும், தலா விழுக்காடு  பங்குகளை ஃப்ராபோர்ட் ஏஜி மற்றும் எராமன் மலேஷியா நிறுவனங்களும்  வைத்திருக்கிறன.

ஆந்திர மாநில அரசுடன் இணைந்து ஏ.ஏ.ஐ நிறுவனம், ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் 26 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கிறது. இதே அளவிலான பங்குகளைக் கர்நாடக அரசுடன் சேர்த்து பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலும் வைத்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய சட்டம் நிறைவேற்றப்படும் : திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை

2021-22 ஆம் நிதி ஆன்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொது உள்கட்டமைப்பு சொத்துக்களைப் பணமாக்குவது, புதிய உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கு நிதி திரட்டுவதற்கான மிக முக்கியமான முயற்சி எனக் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் போன்ற 100 சொத்துக்களை விற்க அரசு இலக்கு வைத்துள்ளது, இதன் வழியாகப் ரூ.2.5 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க முடியும் எனக் கூறியுள்ளார்.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் அடுத்த நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source : PTI   

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்