Aran Sei

கூடுதல் விலையில் தடுப்பு மருந்துகளை கொள்முதல்செய்த ஒன்றிய அரசு – இந்த விலையேற்றம் யாருக்கு லாபம்?

credits : the new indian express

கஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு தேவையான தடுப்பூசிகளை திருத்தப்பட்ட விலையில் (ரூ. 205 மற்றும் ரூ. 215) ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய  இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீரம் நிறுவனத்திடம் இருந்து 37.5 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 28.5 கோடி கோவாக்சி தடுப்பூசிகளும் மொத்தமாக 66 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

தடுப்பூசிகளின் முந்தைய ஒப்பந்த விலைக்கு பதிலாக கோவிஷீல்ட் ஒரு டோஸ் ரூ 205 விலையிலும் (வரி நீங்கலாக) மற்றும் கோவாக்சின் ஒரு டோஸ் ரூ 215 விலையிலும் (வரி நீங்கலாக) கொள்முதல் செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என அந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளுக்கான தடுப்பு மருந்தை முழுதும் பரிசோதனை செய்யுங்கள்- ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இரண்டு தடுப்பூசிகளை ரூ. 150க்கு ஒன்றிய அரசு கொள்முதல் செய்து வந்த நிலையில், தற்போது திருத்தப்பட்ட விலைக்கு கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்