Aran Sei

விவசாயப் போராட்டக்களங்களில் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சம்யுக்ட் கிசான் மோர்ச்சா கோரிக்கை

விவசாயிகள் போராட்டம் நடைபெறும் களங்களில், கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்க வேண்டும் என்று விவசாய சங்கமான சம்யுக்ட் கிசான் மோர்ச்சா மத்திய அரசுக்குத்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் தலைவர் தர்ஷன் பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வைரஸ் பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிவது, தேவையான விதிமுறைகளைப் பின்பற்றுவது என தங்களால் முடிந்ததை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். அதே நேரத்தில், போராட்ட களத்தில் தடுப்பூசி மையங்களை அமைத்தல் உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள்மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டிய கடமையை நிறைவேற்றுமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

’ஏப்ரல் 21 அன்று விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள் டெல்லி நோக்கி பேரணி’ – விவசாயிகள் அறிவிப்பு

தேர்தல் பிரச்சாரங்களின்போது கொரோனா குறித்த வழிகாட்டுதல்களை பின்பற்றாத பாஜக, விவசாய போரட்டங்களில் கவனத்துடன் இருக்கிறது என சம்யுக்ட் கிசான் மோர்ச்சா குற்றம்சாட்டியுள்ளது.

அறுவடைகாலம் முடிந்த பின்னும் பலர் போராட்டக் களத்திற்கு வரவில்லை என்றாலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்புக்களை தொடர வேண்டும் என்றும் எஸ்.கே.எம் வேண்டுகோள் விடுத்தது. அரசு விவசாய சட்டங்களை ரத்து செய்து, குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை போராட்டத்தை நிறுத்தமாட்டோம் என்று அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Source : Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்