Aran Sei

தடுப்பூசி வாங்குவதற்கு கடன் கோரிய ஒன்றிய அரசு – 200 கோடி டாலர் கேட்டு விண்ணப்பம்

ந்திய ஒன்றிய அரசு 66.7 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்காக  ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிகளில் கடன் கேட்டு  விண்ணப்பித்து உள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவைத் தலைமையகமாகக் கொண்டு ஆசிய வளர்ச்சி வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பெரும் பங்குதாரர்களாக இருக்கின்றனர். இவ்வங்கியில் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக கோரப்பட்டுள்ளது.

திரிபுரா வன்முறை: பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது – எஸ்.டி.பி.ஐ.

சீனத் தலைநகர் பீஜிங்கில் தலைமையிடமாகக் கொண்டது ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி. இந்த வங்கியில் சீனா மற்றும் இந்தியா பெரும் பங்குதாரர்களாக இருக்கின்றனர். இவ்வங்கியில் இருந்து சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக கோரியுள்ளது இந்தியா.

ஆசிய வளர்ச்சி வங்கி தொடங்கி, முன்னெடுத்து வரக்கூடிய ஆசிய பசுபிக் நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும்  திட்டத்தின் மூலமாக இந்தக் கடன் உதவிக்கு இந்திய ஒன்றிய அரசின் சார்பாக விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கியை பொருத்தவரை தடுப்பூசிக்கு அவர்கள் நிதி உதவி செய்வதற்கு இரண்டு தகுதிகளை வைத்துள்ளனர்.

திரிபுரா: வன்முறையில் முடிந்த விஷ்வ இந்து பரிஷத் பேரணி- கொளுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள்

முதலாவதாக ‘கோவேக்ஸ்’ எனப்படும் உலக நாடுகள் அனைத்திற்குமான தடுப்பூசி வசதி திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளை வாங்க வேண்டும். இரண்டாவதாக அந்த தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பினாலோ அல்லது உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்ட ஒழுங்குமுறை அமைப்பு ஒன்றின் மூலமாக அங்கீகரிக்கப்பட்டவைகளாக இருக்க வேண்டும். ஆனால், இந்திய அரசின் சுகாதாரத் துறை தரம் வாய்ந்த ஒழுங்குமுறை அமைப்பாக உலக சுகாதார நிறுவனம் கருதவில்லை.  இதனால்தான் இன்றுவரை இந்திய சுகாதாரத் துறை அங்கீகரித்த கோவாக்ஸினை உலக நாடுகள் ஒருமித்து ஏற்றுக் கொள்வதில் பெரும் சிக்கல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிதியை பெறும் பட்சத்தில் அதனை பயன்படுத்தி கோவிஷீல்டை மட்டும் தான் இந்திய ஒன்றிய அரசால் கொள்முதல் செய்ய முடியும் எனும் நிலை ஏற்படும்.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி கடந்த வாரத்தில் தான் இந்தியாவிற்கு  பல்வேறு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளது. குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்தின் இரண்டாம் கட்டப் பணிக்காக 35.67 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி அளிக்கப்பட்டிருக்கிறது. 2015 இல் நிறுவப்பட்ட இந்த வங்கியில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 28 வளர்ச்சிப் பணிகளுக்காக சுமார் 670 கோடி அமெரிக்க டாலர்களை கடனாகப் பெற்றுள்ளது இந்தியா. நிதியத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரரான இந்திய ஒன்றியம்தான் மிக அதிகமாக கடன் பெற்ற நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்