பயணிகள் ரயிலைத் தனியார் இயக்க அனுமதிக்கு ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏல நடைமுறையில், யாரும் ஏலம் கோர முன்வராதததால், திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
12 ரயில்வே மண்டலங்களைச் சேர்ந்த சில ரயில்களை இயக்குவதற்கான ஏல ஒப்பந்தங்களைக் கடந்த ஆண்டு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதில் மூன்று ரயில்களுக்கு மட்டுமே ஏலங்கள் கோரப்பட்டன.
ஒழுங்குமுறை அதிகாரி இல்லாதத்து, வருவாயைப் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் சிக்கல், பாதையின் நெகிழ்வுத்தன்மை மீதான தடைகள் ஆகியவை காரணமாக ஒப்பந்தப்பந்தங்கள் கோரப்படவில்லை என ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
”தனியார் பயணிகள் ரயில் நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை அழைக்கும் முழு செயல்முறையும் மறு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. மறு மதிப்பீடு முழுமையாக முடிவடைந்தவுடன், தற்போதை செயல்முறை ஏலங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது அகற்றப்படாமல் போகலாம்” என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், ரயில்வே நிர்வாகம் 12 மண்டலங்களில் 109 வழித்தடங்களுக்கான பயணிகளை ரயிலைத் தனியார்கள் இயக்குவதற்கான ஏல ஒப்பந்தங்களைக் கோரியது. ஏலத்தில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த 35 ஆண்டுகளுக்கு வருவாய் அடிப்படையில் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கிக் கொள்ள முடியும்.
கடந்த ஆண்டு தகுதிக்கான கோரிக்கையில் போது 16 நிறுவனங்கள் ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது 3 நிறுவனங்கள் மற்றுமே ஏலங்களை சமர்பித்துள்ளன. மற்ற நிறுவனங்கள் அனைவரும் ஏல விதிகள் ரயில்வேவிற்கு சாதகமாக இருப்பதாக கூறி பின்வாங்கியுள்ளனர் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source : PSU Watch
தொடர்புடைய பதிவுகள்:
விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி – மூடப்பட்ட அதானி நிறுவனமும் மக்கள் போராட்டமும்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.