சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் புதிய தடுப்பூசியான கோவோவேக்ஸ் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்க இந்திய மருத்துதரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வல்லுநர்கள் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரித்து சீரம் நிறுவனம், 2 முதல் 17 வயதினருக்கான தடுப்பூசியான கோவோவேக்ஸ் தடுப்பூசியை அமெரிக்காவின் நோவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை – கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இதற்காக நோவாக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட சீரம் நிறுவனம், இந்த தடுப்பூசியைச் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதற்கான மருத்துவமனை பரிசோதனை மார்ச் மாதம் தொடங்கப்பட்டு முதற்கட்ட பரிசோதனையை முடித்துள்ளது. மேலும் இரண்டாம் கட்ட பரிசோதனையை நடத்த இந்திய மருந்துதரக் கட்டுப்பாடு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
இதன்படி 12 முதல் 17 வயதுடைய 460 குழந்தைகளுக்கும், 2 முதல் 11 வயதுடைய 460 குழந்தைகளுக்கும் 2வது கட்ட பரிசோதனையை நடத்த 10 மையங்களில் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவோவாக்ஸ் தடுப்பு மருந்தின் 2வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்க இந்திய மருந்துதரக் கட்டுப்பாடு ஆணையத்தின் வல்லுநர்கள் குழு எதிர்த்துள்ளது.
”கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு இதுவரை எந்த நாடும் அனுமதி வழங்காத நிலையில், இதற்கான 2வது கட்ட பரிசோதனையைச் சீரம் நிறுவனம் நடத்த இந்திய மருந்துதரக் கட்டுப்பாட்டு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், முதற்கட்ட பரிசோதனையில் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த புள்ளிவிவரங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறித்த விவரங்கள் ஆகியவற்றை சீரம் நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.