Aran Sei

அரசு ஊழியர்களை தேர்தல் ஆணையராக நியமிக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

credits : the hindu

அரசு ஊழியருக்குக் கூடுதலாக மாநில தேர்தல் ஆணையர் பொறுப்பை வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்தைக் கேலிக் கூத்தாக்கும் செயல் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், பாஜக ஆளும் மாநிலமான கோவாவின் நகராட்சிகளுக்கு (மோர்முகாவ், மார்காவ், மபூசா, குவேபம், சங்குவெம் ) தேர்தல் அறிவிக்கப்படது. இந்த நகராட்சி தேர்தலுக்கு, தேர்தல் ஆணையராக கோவா மாநிலத்தின் சட்டத்துறை செயலாளர்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து கோவா மாநிலத்தின் தேர்தல் ஆணையம் அறிவித்த தேர்தலுக்கு, மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து கோவா அரசு உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்திய மத்திய அரசு – மக்களின் உரிமை பறிக்கப்படாதென உச்சநீதிமன்றத்தில் தகவல்

இந்த வழக்கு நீதிபதிகள் ரோஹிங்டன் எஃப். நரிமன், பி.ஆர். காவாய், ரிஷிகேஷ் ராய் ஆகிய மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு அரசாங்கத்தின் ஊழியருக்கு கூடுதல் பொறுப்பாக மாநில தேர்தல் ஆணையர் பொறுப்பை வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்தைக் கேலிக் கூத்தாக்கும் செயல் எனவும், அரசு எந்த நிறுவனத்தையும் சாராத சுதந்திரமான ( அரசுத்துறையைச் சாராதவர்) நபர்களை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்குள்தான் இருக்க வேண்டுமா? – 30 ஆண்டுகால தீர்ப்பை மறுபரிசீலினை செய்ய உச்சநீதிமன்றம் விருப்பம்

மேலும், ”இந்தியாவில் தற்போது மாநில தேர்தல் ஆணையராக செயல்படும் யாரேனும் அரசாங்க ஊழியராக இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும்” என கூறியுள்ள அவர்கள், ”ஒரு அரசாங்க ஊழியரோ அல்லது அரசாங்க அதிகாரியோ தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட கூடாது என உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி  வெளியிட்டுள்ளது.

ஆவணங்களின் அடிப்படையிலேயே கேள்வி கேட்கப்பட்டது – சர்ச்சைக்குரிய கேள்விக்கு உச்சநீதிமன்றம் விளக்கம்

மேலும், தேர்தலைத் தடை செய்வதாக  மும்பை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க  உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்