ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்னெஸ்டி இண்டர்நேஷனல், வெறுப்பு குற்றங்களுக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை கிடைப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
எந்தவொரு தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ரியாஸ் அக்தாரி மற்றும் கௌஸ் முகமது என்ற இரண்டு நபர்களால் தையல்காரர் கன்னையா லால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியாவின் தலைவர் ஆகர் பட்டேல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” கன்னையா லால் கொடூரமாகக் கொல்லப்பட்டதை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த கொலைகுறித்து உடனடியான, முழுமையான, சுயாதீனமான, பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் பயனுள்ள விசாரணையை இந்திய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி மற்றும் பயனுள்ள தீர்வுகளைப் கிடைப்பதை இந்திய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டமிட்ட பாரபட்சம் மற்றும் வன்முறையிலிருந்து அனைவரையும் பாதுகாக்கவும், அதற்குக் காரணமானவர்களை உடனடியாக நீதியின் முன் நிறுத்தவும் இந்திய அதிகாரிகள் தவறியதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்று ஆகர் பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.
வெறுப்பு குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனையில் இருந்து தப்பாமல் இருப்பதை இந்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும், மேலும் பழிவாங்கும் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு தாக்குதல்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வன்முறைக்கு வழிவகுக்கும் எதையும் இந்திய அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என்று படேல் கூறியுள்ளார்.
Source: The Telegraph
RSS Shaka வை பற்றி கேள்விக்கேட்க Sumanth C Raman-க்கு திராணி இருக்கா?
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.