Aran Sei

மத்திய அரசு நிதி குறைப்பு – கேள்விக்குறியாகும் காலை உணவு திட்டம்

னைத்து அரசு பள்ளிகளிலும் இலவச காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டுமென மத்திய கல்வித்துறைக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நடப்புநிதி ஆண்டின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி துறைக்கு ஏற்கனவே 5000 கோடி ரூபாய் நிதி குறைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்தத் திட்டத்தினால் கூடுதலாக 4000 கோடி ரூபாய் நிதி சுமைக்கூடும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

” பசு விஞ்ஞான ” தேர்வை எழுத மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் – யுஜிசி வலியுறுத்தல்

 

நிலைக்குழுவின் பரிந்துரையின்படி காலைஉணவு  1 முதல் 8 வகுப்புவரை படிக்கும் நடுநிலைபள்ளி மாணவர்களோடு  கூடுதலாக ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், உணவுக்குத் தேவையான பொருள்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழு மக்களவையில் சமர்ப்பித்த அறிக்கையில், தேசிய கல்விக்கொள்கை 2020யின் படி அனைத்து மாநில அரசு பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை அடுத்த கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப் படுத்தவேண்டுமெனப் பரிந்துரைத்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீஷா ரவி கைது : எதேச்சதிகார அரசுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் குரல் கொடுக்க வேண்டும் : ப.சிதம்பரம்

இதுகுறித்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சகத்தின் அதிகாரிகள், காலை உணவு திட்டத்திற்காண நடப்பு பட்ஜெட் 11.8 கோடி மாணவர்களுக்கு 11,000 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறப்பட்டுள்ளது.

ஏப்ரலில் தொடங்கும் அடுத்த கல்வி ஆண்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்குக் கூடுதலாக 4000 கோடி செலவாகக்கூடும் எனவும், ஏற்கனவே சென்ற நிதியாண்டில் கல்விக்கான நிதி, பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி கூறுகிறது.

2020-2021ஆம் நிதியாண்டில் பள்ளி கல்வித்துறையின் நிதியானது 59,845 கோடியாக இருந்ததாகவும், தற்போது 54,873 கோடியாக நடப்பு நிதியாண்டில் 8 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

மும்பை ஐஐடியில் பழங்குடியின மாணவர்களுக்கான ஒரு இடம் கூட நிரப்பப்படவில்லை – ஆர்டிஐ தகவல்

இந்தத் திட்டத்திற்கான மத்திய நிதியானது 2020-2021 ஆம் ஆண்டில் 11,000 கோடியாக கணக்கிடப்பட்டகாகவும், பின்னர் திருத்தப்பட்டு 12,900 கோடியாக நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால் 2020-2021 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் 11,500 கோடியாகக் குறைக்கப்பட்டது என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1 முதல் 8 வகுப்பு குழந்தைகளோடு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட இருப்பதால் நிதி சுமை கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நிதி நிலையில் மாநில அரசும் நிதிப்பங்கீடு செய்தால் செயல்படுத்த இயலும் என்று தி இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்