Aran Sei

பாபர் மசூதி இடிப்பை விமர்சிக்கும் வகையில் கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா – ட்விட்டர் கணக்கு குறித்து புகார் அளித்த ஒன்றிய அரசு

பாபர் மசூதி இடிப்பு குறித்து பாஜகவை விமர்சிக்கும் வகையில் கேலிச் சித்திரம் வரைந்து ட்விட்டரில் பதிவிட்ட, கார்ட்டூனிஸ்ட் பாலாவின் ட்விட்டர் கணக்கின் மீது இந்திய ஒன்றிய அரசு புகார் அளித்துள்ளது.

இந்தியாவில் கல்வி சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் வலதுசாரிகள் – விரிவான அறிக்கை

இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகம் அவருக்கு அனுப்பியுள்ள செய்தியில், இந்த சித்திரத்தில் உள்ள கருத்துகள் இந்திய சட்டங்களை மீறுவதாக உள்ளது என்று கூறி ஒன்றிய அரசு புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “ட்விட்டர் பயனாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதாகவும், ஒரு கருத்தை நீக்க வேண்டுமென புகார் அளிக்கப்பட்டால் அதுகுறித்து அனுப்பப்படும் செய்தி எனவும், அந்த கருத்தை பதிவிட்டவர் சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ளாரா,இல்லையா என்பது குறித்து அனுப்படும் நோட்டீஸ்” என்றும் தெரிவித்துள்ளது.

குணால் கம்ரா முதல் பாமரன் வரை – வெறுப்பு அரசியலும் சிரிப்பின் வலிமையும்

அதுமட்டுமின்றி, “நீங்கள் விரும்பினால், உங்கள் நலன்களைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். சட்ட ஆலோசனையைப் பெறுவது மற்றும் நீதிமன்றத்தை நாடுவது, தொடர்புடைய சிவில் சமூக அமைப்புகளைத் தொடர்புகொள்வது, உள்ளடக்கத்தை தானாக முன்வந்து நீக்குதல் (விருப்பப்பட்டால்) அல்லது வேறு சில தீர்மானங்களைக் கண்டறிதல் ஆகியவை இதில் அடங்கும்” என்றும் ட்விட்டர் நிர்வாகம் அவருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்