விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, சமூக வலைதளமான ட்விட்டரில், தவறான தகவல்களையும், சமூகத்தில் வெறுப்பையும் பரப்புகிற ஆயிரக்கணக்கான கணக்குகளை முடக்குமாறு மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, விவசாய போராட்டத்தில் நடக்கும் தினசரி நடவடிக்கைகளைத் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்திருந்த பலரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. இதில் தனிநபர்களின் ட்விட்டர் கணக்குகள், குழுக்களின் கணக்குகள், செய்தி நிறுவனத்தின் கணக்குகள் ஆகியவை அடக்கம்.
விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பிலிருந்து போராட்டங்களில் நடக்கும் விஷயங்களை வெளிக் கொண்டு வந்த கேரவன் பத்திரிகை, டிராக்டர் 2 ட்விட்டர், கிசான் ஏக்தா மோர்ச்சா ஆகிய கணக்குகள் முடக்கப்பட்டன.
விவசாய போராட்டத்தை பதிவிட்டதால் கணக்குகள் முடக்கம்: யாருக்கு ஆதரவாக செயல்படுகிறது ட்விட்டர்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முகமது சலீம், செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஜர்னெய்ல் சிங் மற்றும் ஆர்த்தி, பத்திரிகையாளர் சந்தீப் செளத்ரி, எழுத்தாளர் சஞ்சுக்தா பாசு, முகமது ஆசிஃப் கான், நடிகர் சுஷாந்த் சிங் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் உட்பட 257 கணக்குகளை முடக்கியது.
ஆனால், அரசு அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புகளில், குறிப்பிட்ட கணக்குகளும் ட்வீட்டுகளும் சுதந்திர பேச்சுரிமைக்குள் வருபவை என்றும் செய்தி தரம் வாய்ந்தவை என்றும் கூறி அந்தக் கணக்குகளை ட்விட்டர் அதே நாளில் மறுபடியும் செயல்பட அனுமதித்தது.
முடக்கிய கணக்குகளை மீண்டும் செயல்படுத்திய ட்விட்டர் – ஒரே நாளில் பல்டி
தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவை செயல்படுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும், ட்விட்ர் உயர்மேலாளர்கள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது.
” கணக்குகளை முடக்கா விட்டால், சிறைத்தண்டனை, அபராதம் ” – ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 4-ம் தேதி, விவசாய போராட்டத்தின் மூலமாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வெளிநாட்டைச் சேர்ந்த சக்திகள் சதி செய்வதாக , பாதுகாப்பு ஏஜென்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ட்விட்டர் தளத்தில் அவ்வாறு 1178 கணக்குகள் செயல்படுவதாக கூறியுள்ள பாதுகாப்பு ஏஜென்சிகள் அவை பெரும்பாலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனவும் பாகிஸ்தானின் பின்னணியிலிருந்து அவர்கள் செயல்படுகிறார்கள் எனவும் கூறியுள்ளன.
இந்திய வம்சாவளியினரின் உணவு உபசரிப்பு: இது ஒன்றே போதுமானது – மியா காலிஃபா நெகிழ்ச்சி
விவசாய போராட்டங்களுக்கு ஆதரவாக சர்வதேச பிரபலங்களின் கருத்தை ட்விட்டரின் முதன்மை செயல் அதிகாரி ஜாக் டார்சி லைக் செய்தது அவரின் நடுநிலைத்தன்மையை கேள்விக்குள்ளாகுகிறது என்றும் அந்நிய நாட்டு சதி உள்ளது என்ற கருத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது என்றும் மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாக என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.
’அம்பானி, அதானியை புறக்கணிப்போம்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் ட்ரெண்டிங்
இந்த ட்விட்டர் கணக்குகள், இந்திய அரசுக்கு எதிராக அதிருப்தியையும், வெறுப்பையும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. மேலும், அவை பல்வேறு சமூக, மத மற்றும் கலாச்சார குழுக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வதாக இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது என என்டிடிவி செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.