Aran Sei

சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு புதிய விதிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு

மூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களுக்குப் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது தொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சமூக ஊடகங்களுக்கான விதிமுறைகளை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மற்றும் ஓடிடி, டிஜிட்டல் செய்தி ஊடகங்களுக்கான விதிமுறைகளைத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் அறிவித்தனர்.

சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்களுக்கான விதிமுறைகளை அறிவித்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “நாங்கள் புதிய சட்டங்களை வகுக்கவில்லை. தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் சில விதிமுறைகளை வகுத்துள்ளோம். இந்த விதிமுறைகளை அந்த நிறுவனங்கள் பின்பற்றும் என நம்புகிறோம். சுய கட்டுப்பாடு என்பதே இந்த விதிமுறைகளின் நோக்கம்”. என அவர் தெரிவித்தார்.

பெரிய சமூக ஊடகங்கள், மூன்று ஊழியர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது, “சட்டம் மற்றும் விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கு பொறுப்பான ஒரு” தலைமை இணக்க அதிகாரியை “நியமிக்க வேண்டிய அவசியம். இரண்டாவதாக, “சட்ட அமலாக்க முகவர் மற்றும் அதிகாரிகளுடன் 24 × 7 ஒருங்கிணைப்புக்கு ஒரு தொடர்பு நபரை” நியமிக்க வேண்டும்.கடைசியாக ஒரு குறை தீர்க்கும் அதிகாரி, அவர் குறை தீர்க்கும் வழிமுறையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவார் என ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு; 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு முழு தேர்ச்சி – முதலமைச்சர் அறிவிப்பு

ஒரு செய்தியின் ‘முதல் தோற்றுவிப்பாளரை’ கண்காணிக்கவும் விதிகள் தேவை என்றும், செய்தியின் உள்ளடக்கத்தில் அக்கறை இல்லை என்றாலும், அந்தச் செய்தியை யார் தொடங்கினார்கள் என்பதை அறிய வேண்டியது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

தவறான அல்லது போலி செய்தியின் முதல் தோற்றத்தை, சமூக ஊடக தளங்கள் வெளியிட வேண்டும் என்றும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை, பொது ஒழுங்கு, அல்லது பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் ரீதியான எந்தவொரு விஷயத்திலும் முதல் தோற்றுவிப்பாளரை கண்டுபிடிப்பது தேவைப்படும் என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத மருத்துவர்கள் தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் – மத்திய ஆயுஷ் அமைச்சர் கருத்து

ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள்

ஒடிடி இயங்குதளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கான விதிமுறையை அறிவித்த  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் குறை தீர்க்கும் முறையை கடைபிடிக்க வேண்டும். அரசாங்கம் ஒடிடி தளங்களங்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிப்பதோடு, எந்தவொரு குறைகளையும் தீர்ப்பதற்கான வழிமுறையை ஏற்படுத்துவதை விரும்புகிறது” எனத் தெரிவித்தார்.

படங்களுக்குத் தணிக்கை இருப்பதை போன்று ஓடிடி  இயங்குதளங்கள் அவற்றின் திரைப்படங்களையும் உள்ளடக்கத்தையும் வயது அடிப்படையில் தாங்களாக வகைப்படுத்த வேண்டும். வயது தகுதியின் அடிப்படையில் உள்ளடக்கத்தை வகைப்படுத்த வேண்டும். ஓடிடி வீடியோக்கள் 13+, 16+ மற்றும் பெரியவர்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை வகைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மேலும், இந்தத் தளங்களுக்கு எந்தவிதமான தணிக்கைகளையும் கொண்டு வரவில்லை என்பதை தெளிவுபடுத்துவதுடன், பெற்றோரின் கட்டுப்பாடு (Parental Lock) மற்றும் அதனுடன் இணங்குவதை உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறை இருக்க வேண்டும் என்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற தளங்களில் ஏற்கனவே ஒரு வழிமுறை உள்ளது என்பதையும் பிரகாஷ் ஜவடேக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தனியார் வங்கிகளுக்கு அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு

டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் “இந்திய பிரஸ் கவுன்சிலின், பத்திரிகை நடத்தை விதிமுறைகளையும் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். புதிதாக தொடங்கும் டிஜிட்டல் ஊடகங்கள் மத்திய அரசின்  தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிய வேண்டும்” என ஜவடேகர் தெரிவித்தார்.

டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் அதன் பயனர் குறைகளைத் தீர்க்கவும், நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த மூன்று அடுக்கு வழிமுறை நடைமுறைப்பட்டுத்தப்படும் என ஜவடேகர் அறிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்