Aran Sei

மருத்துவ மாணவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த மத்தியஅரசு திட்டம்- 100 நாட்கள் பணிபுரிந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க இறுதியாண்டு மருத்துவ மாணவர்களை ஈடுபடுத்த உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

மேலும்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவப்பணியாளர்கள் பற்றாக்குறை நிலவாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பணியில் உள்ள மருத்துவ மாணவர்களுக்கு பாதுகாப்பு வசதி இல்லை – கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடருமென அறிவிப்பு

இதன் காரணமாக, மேல்நிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு நான்கு மாதங்களுக்கு ஓத்திவைக்கப்படுவதாகவும், ஆகஸ்ட் மாதம்வரை தேர்வு நடைபெறாது என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவ மாணவர்கள் மூத்த மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இணையத்தில் பரவும் கேரளா மருத்துவ மாணவர்களின் நடனம் – ‘லவ் ஜிகாத்’ என மிரட்டும் இந்துத்துவ அமைப்பினர்

இதேபோன்று, இளநிலை நர்சிங் படித்த செவிலியர்களையும் கொரோனா பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக  மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், 100 நாட்கள் கொரோனா பணியில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்களுக்கு அரசின் பணிவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

SOURCE; THE HINDU

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்