Aran Sei

ஆளுநரின் தேனீர் விருந்து – விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம் புறக்கணிப்பு

சித்திரை 01- தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் தமிழ்நாடுஆளுநர் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை விடுதலைச் சிறுத்தைகள் காட்சியும் மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் காட்சியும் வெளிநடப்பு செய்துள்ளன

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும் விடுத்தலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், , சித்திரை 01- தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் மேதகு ஆளுநர் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எனக்கும் அழைப்பு விடுத்துள்ள ஆளுநர் அவர்களுக்கு நன்றி.
எனினும், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கும் ஆளுநரின் செயலை கண்டித்து இந்த தேநீர் விருந்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்து ராஷ்ட்ரா – இந்துஃபோபியா; ஒன்றிய அரசின் இரட்டை சவாரிக்கான காரணம் என்ன? – மு.அப்துல்லா

தமிழக ஆளுநரின் அழைப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்சனை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்பதிலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முடிவு செய்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை கலவரக்காடாக ஆக்க துடிக்கும் H Raja

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்