Aran Sei

ஆர்.என். ரவியை தமிழ்நாட்டிற்கு மாற்றியிருப்பது நாகலாந்திற்கு நிம்மதி – நாகலாந்து தேசியவாத முற்போக்கு கட்சி கருத்து

நாகாலாந்தின் ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டிருப்பது நாகாலாந்தில் பலருக்கு நிம்மதியை தந்துள்ளது என நாகாலாந்தின் அனைத்து கட்சி கூட்டணி அரசிற்கு தலைமை தாங்கும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி (என்.டி.பி.பி) தெரிவித்துள்ளது.

ஆர்.என். ரவி நாகாலாந்து ஆளுநராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது அவரை தமிழ்நாட்டின் ஆளுநராக ஒன்றிய அரசு மாற்றியுள்ளது.

ஆளுநர் ரவி செயல்பட்ட விதம் அரசுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என கூறிய என்.டி.பி.பி தலைவர் சிங்வாக் கொன்யாக், ”அவர் அரசாங்கத்தின் பல விவகாரங்களில் தலையிட்டார். சிலர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் (அவரின் இடமாறுதல் காரணமாக), சிலர் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (இசாக் – முய்வா) குழுவை அவர்கள் குறிவைப்பதாகவும், அதே நேரத்தில் அவர்களின் போட்டி தீவிரவாத குழுக்களிடம் மென்மையான அணுகுமுறையைக் கடைபிடித்ததாகவும் கருதப்பட்டது.

நாகாலாந்து சமாதான செயல்முறைக்கு அவர் இடைத்தரகராக இருப்பதை மாற்றுமாறு நாகலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (இசாக் – முய்வா) கோரியிருந்தது.

அரசை ஆர்.என். ரவி கையாளும் விதத்தால், நாகா அரசியல் பிரச்னை முன்னேற்வில்லை என்று பொதுவான ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது என மனித உரிமைகளுக்கான நாகா மக்கள் இயக்கம் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்