மேற்குவங்க சட்டப்பேரவையின் செயல்பாடுகளில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் குறுக்கிட்டு வருவதாக, அம்மாநில சட்டபேரவை சபாநாயகர் பீமன் பானர்ஜீ தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
‘அரசியலமைப்பிற்கு எதிராக செயல்படும் மேற்குவங்க ஆளுநர்’ – சிவசேனா குற்றச்சாட்டு
மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானெர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும் இடையே முரணான போக்கு நிலவிவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மம்தா பதவியேற்ற மேடையிலேயே ஆளுநர் தேர்தலுக்குப் பின் நடந்த கலவரம்குறித்த தன் கருத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில், காணொளிக் காட்சி வழியாக நடந்த , மாநில சட்டப் பேரவைகளின் சபாநாயகர்கள் மாநாட்டில், ஆளுநர்குறித்து ஓம் பிர்லாவிடம் மேற்கு வங்க சட்டப்பேரவை சபாநாயகர் இவ்வாறு தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ள சபாநாயகர் பீமன் பானர்ஜீ , தான் மேற்குவங்க சட்டப்பேரவைக்குள், ஒன்றிய பாதுகாப்பு படையினர் நுழையக் கூடாதென உத்தரவிட்டதாகவும் சில வாரங்களுக்கு முன்னர், சில பத்திரிகையாளர்கள் அவர்களால் பாதிப்புக்கு உள்ளனதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.
மேலும், முற்றிலும் தன் அதிகார வரம்பில், ஆளுநர் தலையிட முயற்சித்து வருவதாகவும் சபாநாயகர் பீமன் பானர்ஜீ கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநில அரசுக்கும் ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும் இடையில் இது போன்ற சூழல் முன்பே எழுந்துள்ள நிலையிலும், அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் முதல் முறையாகப் பொதுவெளியில் ஆளுநர்குறித்து குற்றம்சாட்டியுள்ளதாகவும், சில நாட்களுக்கு முன்னர் மேற்குவங்க சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரை இன்றியே நடைபெற்றதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.