Aran Sei

ரெம்தேசிவிர் தடுப்பூசிகளுக்கு இறக்குமதி வரி தள்ளுபடி – மத்திய அரசு முடிவு

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்தேசிவிர் மருந்துக்கான 10 விழுக்காடு இறக்குமதி வரியைத் தள்ளுபடி செய்து  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ரெம்தேசிவிர் மருத்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முலப்பொருட்களுக்கும் வரி தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெம்தேசிவிர் மூலப்பொருட்களில் முக்கியமானதாக கருதப்படும் பீட்டா சைக்ளோடெக்ஸ்ட்ரினுக்கு விதிக்கப்பட்டிருந்த 7.5 விழுக்காடு வரிக்கு அக்டோபர் 31, 2021 ஆம் தேதிவரை  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாற்றமடைந்த கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிராக தடுப்பூசி பலனளிக்கிறதா? – சி.சி.எம்.பி மையம் ஆய்வு

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா இரண்டாவது அலை பரவலை தொடர்ந்து, கொரோனா தடுப்பு மருந்து மற்றும் அதன் மூலப்பொருட்கள் ஏற்றுமதியை ஏப்ரல் 11 ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்