Aran Sei

சமூக வலைதளங்களில் அரசாங்கம் விமர்சிக்கப்படுவதை வரவேற்கிறோம்: மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

credits : the wire

”சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது பிரச்சனை அல்ல, சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவது தான் பிரச்சனை” என மத்திய தகவல் தொழிற்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டூல் கிட்டை (செயல் திட்டம்) ட்விட்டரில் பகிர்ந்த தீஷா ரவி கைது செய்யப்பட்டது தொடர்பாக, காங்கிரஸ் உறுப்பினர் ஜி.சி.சந்திரசேகர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த மத்திய தகவல் தொழிற்நுட்பம் மற்றும் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “140 கோடி சமூக வலைதள பயனாளர்களை (Users) கொண்டுள்ளதில் இந்தியா பெருமை அடைகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், லின்கிட் இன் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் சுதந்திரமாக செய்கின்றன. இந்தச் சமூக வலைதளங்கள் சாதரண குடிமக்களை வலிமைப்படுத்தியுள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை அரசு வரவேற்கிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது பிரச்சனை அல்ல. ஆனால், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவது தான் பிரச்சனை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் டிஆர்பி வெறியால் குற்றவாளியாக்கப்பட்டேன் – சூழலியல் ஆர்வலர் தீஷா ரவி குற்றச்சாட்டு

மேலும், “மனிதசக்தி கண்டுபிடித்துள்ள மிகப்பெரிய ஆயுதம் இணையம், ஆனால் அது ஒரு சிலரின் தனிப்பட்ட நலனுக்காக மட்டும் செயல்படக் கூடாது. எனவே, ஒரு சில நிறுவனங்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலையை அனுமதிக்க கூடாது என்கின்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

நோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்

சமீபத்தில், மத்திய தகவல் தொழிற்நுட்பம் மற்றும் தொலை தொடர்பு அமைச்சகம், தகவல் தொழிற்நுட்ப சட்டம் 2021-ன் கீழ், சில விதிமுறைகளை வெளியிட்டது.

தீஷா ரவி “ஜோசப்” என பரப்பியவர்கள் மதவெறி பிடித்த இந்துத்துவவாதிகள் – சசி தரூர் கடும் கண்டனம்

இதைக் குறிப்பிட்டு பேசிய அமைச்சர், ”சமூக வலைதளங்களில் அரசாங்கம் விமர்சிக்கப்படுவதை வரவேற்கிறோம். ஆனால், சமூக வலைதளங்களில் பதிவிடும் பலர், தங்கள் அடையாளங்களை மறைக்கின்றனர். ஆனால், இந்த விதிமுறைகள், சமூக ஊடக நிறுவனங்கள், சமூக ஊடக பயனாளர்கள் தங்கள் அடையாளங்களை தானாக முன்வந்து சரிபார்க்கும்படி கேட்கும் என்பதை உறுதி செய்கின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்