Aran Sei

அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனத்திடம் முடக்க கோரிய ஒன்றிய அரசு – பிடிஐ தகவல்

த்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், ப்ரீடம் ஹவுஸ், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பதிவிட்டவர்கள் ஆகியோரின் கணக்குகளையும் சில ட்விட்டுகளையும் முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

லுமென் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களின்படி, ஜனவரி 5, 2021 யிலிருந்து டிசம்பர் 29, 2021 க்கு இடைப்பட்ட காலத்தில் ட்விட்டர் நிறுவனத்தை ஒன்றிய அரசு கேட்டுகொண்டதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர் முகம்மது சுபேர், செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம்

கூகுல், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையதள நிறுவனங்கள் தங்களுடைய விதிகளுக்கு உட்பட்டு கணக்குகளை முடக்க கேட்கப்படும் தகவல்களை லுமென் தரவுதளம் பதிவுசெய்துள்ளது.  இருப்பினும், கணக்கைத் தடுப்பதற்கான கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா என்பது பற்றிய விவரங்கள் அதில் இல்லை.

ட்விட்டர் தாக்கல் செய்த ஆவணத்தின்படி, உலக அளவில் பிரபலமான வழக்கறிஞர்கள் குழுவான ப்ரீடம் ஹவுஸ் பக்கத்தில் பதியப்பட்டுள்ள ட்விட்டுகளை முடக்குமாறு ஒன்றிய அரசு கோரியுள்ளது. இந்தக் குழு ஜனநாயகம், அரசியல் சுதந்திரம், மனித உரிமைகள், பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது.

இது குறித்து ஒன்றிய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா அனுப்பிய மின்னஞ்சலுக்கு எந்தப் பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா: ‘நடைபிணங்கள்’ – கிளர்ச்சி எம்எல்ஏக்களை விமர்சித்த சஞ்சய் ராவத்

2020 ஆம் ஆண்டு இணையவெளி சுதந்திரம் குறித்து பேசிய ஃப்ரீடம் ஹவுஸின் சில ட்விட்டுகளை முடக்குமாறு ஒன்றிய அரசு கேட்டுக்கொண்ட்தாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களின் ட்வீட்களை தடுக்க அரசாங்கம் கோரியதாக ஆவணம் தெரிவித்துள்ளது. மேலும், சட்டமன்ற உறுப்பினர் ஜர்னைல் சிங்கின் ட்விட்டுகளை முடக்கவும் ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கிசான் ஏக்தா மோர்ச்சாவின் கணக்கை முடக்குமாறு ட்விட்டரிடம் ஒன்றிய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

டெல்லி: முகமது சுபைரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

தனக்கு ஆதரவாக இருப்பவர்களின் ட்வீட்களைத் முடக்குவதற்காக  அரசாங்கம் விடுத்த கோரிக்கைகளுக்கு விவசாய சங்கங்களின் கூட்டு அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடுமையான ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளது.

ஊடகவியலாளர்கள் ராணா அய்யூப், சி.ஜே. வெர்லெமன் ஆகியோரின் ட்வீட்களை முடக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்குப் பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச குழுக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

நுபுர் சர்மாவின் பேச்சை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது: மத உணர்வை புண்படுத்தியதாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு

“பத்திரிகையாளர் ராணா அய்யூப், இந்தியாவில் உள்ள கட்டுரையாளர்  சி.ஜே.வெர்லெமன் ஆகியோரின் ட்விட்டர் கணக்கைத் முடக்கும் இந்திய அரசின் உத்தரவுக்கு ட்விட்டர் இணங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. இது கருத்துகளை தணிக்கை செய்யும் செயற்பாட்டின் ஒரு பகுதியாகும். இது உடனே நிறுத்தப்பட வேண்டும். ஜனநாயகத்திற்கு பத்திரிகையாளர்களின் குரல்கள் அவசியம்” என்று  CPJ ஆசியா என்கிற பத்திரிகையாளர் அமைப்பு  தெரிவித்துள்ளது.

Source: ndtv

Justice Loya வழக்கில் Amit shah சிறை செல்வது உறுதி | Piyush Manush

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்