Aran Sei

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் 5 ஆண்டுகளில் 340 பேர் உயிரிழப்பு – மத்திய அரசு தகவல்

ந்தியாவில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது 340 தூய்மைப்பணியாளர்கள் இறந்துள்ளதாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று (பிப்பிரவரி 2) மக்களவையில், லாதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகர் துக்காராம் ஷ்ரங்கரேவின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், “இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சாதனங்களை நடைமுறைப்படுத்த, தேசியளவிலான கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சாக்கடைகளை இயந்திரத்தின் உதவிக்கொண்டு சுத்தம் செய்வதற்கான தொழில்முறை பயிற்சி வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு நகராட்சியிலும் இதுதொடர்பாக துப்புரவு மையங்கள் அமைக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

துப்புரவு பணியில் மனிதர்களை ஈடுபடுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – பேராசிரியர் லக்ஷ்மணன்

உயிரிழந்த தூய்மைப்பணியாளர்களை பற்றி கூறுகையில், “சென்ற ஆண்டு  டிசம்பர் 31 வரையிலான ஐந்து ஆண்டுகளில், 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கழிவுநீர் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது 340 தூய்மைப்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று அமைச்சகம் கூறியுள்ளது.

சமூக நீதி அமைச்சகத்தின் பதிலில், அதிகப்படியாக உத்தரபிரதேசத்தில் 52 பேரும், அதற்கடுத்தபடியாக தமிழ்நாட்டில் 43 பேரும் டெல்லியில் 36 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் 34 பேரும், ஹரியானா மற்றும் குஜராத்தில் தலா 31 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்