இஸ்ரேலிடம் இருந்து பெகசிஸ் உளவு செயலியை இந்தியா வாங்கியதாக தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் உள்ள குற்றச்சாட்டை விசாரிக்க வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக இஸ்ரேலுக்குச் சென்றிருந்தபோது, இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் நரேந்திர மோடிக்கு இடையே கையெழுத்தான 2 பில்லியன் டாலர் பாதுகாப்பு உபகரணம் தொடர்பான ஒப்பந்தத்தில், பெகசிஸ் உளவு செயலியும் இடம்பெற்றிருந்ததாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்திய அரசிடம் பெகசிஸ் உளவு செயலி உள்ளதா? என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பாஜக அமைச்சர்கள் உட்படப் பொதுமக்களைக் கண்காணிக்க இதனைப் பயன்படுத்தியுள்ளதா? என்றும் விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பெகசிஸ் செயலியைப் பயன்படுத்தவில்லை என்று ஒன்றிய அரசு கூறிவரும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு இறுதியில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.