Aran Sei

காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவு நீக்கமும் மக்கள் உயிரிழப்பும் – ஒன்றிய அரசு தகவல்

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு, பொதுமக்கள் 96 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 366 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஒன்றிய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

இன்று(டிசம்பர் 8), ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “2019 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5 அன்று சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்குப் பிறகு, காஷ்மீரி பண்டிட்/இந்துக்கள் யாரும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து இடம்பெயரவில்லை. ஆனாலும், அண்மையில், காஷ்மீரில் வசிக்கும் சில காஷ்மீரி பண்டிட் குடும்பங்கள் (பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள்) ஜம்மு பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இக்குடும்பங்கள் அரசு ஊழியர்களின் குடும்பங்கள் என்றும் அவர்களில் பலர், அலுவல் ரீதியாகவும் கல்வி நிறுவனங்களின் குளிர்கால விடுமுறையின் பொருட்டும் ஜம்முவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துள்ள நித்யானந்த் ராய், “காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து இந்தாண்டு நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், மொத்தம் பொதுமக்கள் 96 பேர், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 81 பேர் மற்றும் பயங்கரவாதிகள் 366 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்