Aran Sei

நிலமோசடியை தடுக்க நிலங்களுக்கு 14 இலக்க அடையாள எண் – மத்திய அரசு அறிவிப்பு

ந்தியா முழுதும் உள்ள நிலங்களுக்கு 14 இலக்க (Unique Land Parcel Identification Number)அடையாள எண் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிக்கையைக் கடந்த வாரம் நாடாளுமன்ற நிலைக்குழு மக்களவையில் சமர்ப்பித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்காளர்களின் ஆதார் தகவலை முறைகேடு செய்ததாக பாஜக மீது புகார்: தேர்தலை தள்ளி வைக்கலாமா என நீதிமன்றம் கேள்வி

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய நிலப்பதிவு ஆவணங்கள் (Digital India Land Records Modernisation Programme)நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த அடையாள எண் வழங்கும் முறை நடைமுறைப்படுத்த இருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிலத்துக்கான ஆதார் எண் போன்று இந்த 14 இலக்க அடையாள எண் செயல்படும் என்று தி இந்து செய்தி கூறுகிறது.

ஆவணங்கள் சாலையில் கிடந்ததா? – டெல்லி கலவரம் வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

நிலங்களுக்கு 14 இலக்க அடையாள எண் வழங்கப்படும் இந்தத் திட்டமானது ஏற்கனவே 10 மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டுக்குள் நாடுமுழுவதும் நடைமுறை படுத்தப்படவிருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கிறது.

நிலமோசடிகளை தடுப்பதற்காக இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு திட்டத்தில் பல ஆயிரம் கோடி மோசடி – டிஎச்எப்எல் நிறுவனம் மீது சிபிஐ குற்றச்சாட்டு

மேலும், நிலங்களுக்கான 14 இலக்க அடையாள எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படவிருப்பதாகவும் , 14 இலக்க அடையாள எண் வழங்கப்படும் இந்த ஆவணங்களைப் பராமரிக்க மாவட்டந்தோறும் 50 லட்சம் செலவில் ஆவணக்காப்பகம் அமைக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்