Aran Sei

தடுப்பூசி செலுத்துவதில் இந்திய அரசின் நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது – பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு

கொரோனா தடுப்பு மருந்து  செலுத்துவதில் இந்தியாவின் மோசமான செயல்திறன் அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது என்று பொருளாதாரப் பேராசிரியரும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணருமான  கவுஷிக் பாசு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 11 கோடி பேருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி: இந்த அளவு கொரோனாவைத் தடுக்க உதவாதென ஆய்வில் தகவல்

இரண்டாம் அலையில் கொரோனாவின் பரவல் மிக அதிகமாக இந்தியாவில் பரவி வருகிறது. மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவில் கொரோனா பரவலின் பாதிப்பு எண்ணிக்கை தினமும் 3 லட்சத்தைத் தாண்டி வருகிறது. 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 7 விழுக்காடு பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைக்கூட முதல் டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே. இரண்டாம் டோஸ் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை இதைவிடக் குறைவு என்கிறது தகவல். நாட்டின் பல மாநிலங்களில் தடுப்பூசி, படுக்கைகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுங்கள் அல்லது பதவி விலகுங்கள் –  பிரதமர் மோடிக்கு சீதாராம் யெச்சூரி கண்டனம்

தடுப்பூசி நிறுவங்கள் மருந்துகளுக்கு விலையை அதிகரித்துள்ளன.  தடுப்பூசிகுறித்து பேராசிரியரும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்மையில், நியூயார்க் டைம்ஸில் வெளியான தரவின்படி, இந்தியாவில் வெறும் 1.7% மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “உலகின் சிறந்த மருந்துவர்கள், மருத்துவ நிறுவனங்கள், வெற்றிகரமான தடுப்பூசி திட்டங்கள் என்ற வரலாறு இந்தியாவில் உள்ளது. ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவின் மோசமான செயல்திறன் அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது” என்று பொருளாதாரப் பேராசிரியரும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணருமான  கவுஷிக் பாசு கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்