Aran Sei

கூகுள் நிறுவனத்தில் நிலவும் பாகுபாடுகள் – பதவி விலகும் செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகள்

கூகுள் நிறுவனத்தின் மிகமுக்கிய அறிஞரான ஆய்வுத்துறை மேலாளர் ஷாமி பென்ஜிஓ அப்பணியிலிருந்து விலகியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

59.5 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் – அறிக்கை வெளியிட்ட கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனத்தில் ஷாமி பென்ஜிஓவுடன் பணிபுரிந்த இரண்டு செயற்கை நுண்ணறிவு அறிஞர்கள் பணியிட சூழலில் நிலவும் பாகுபாடுகள் குறித்தும், பன்முகத்தன்மை குறித்தும் அதிருப்தி அடைந்து பதவி விலகியதை தொடர்ந்து தற்போது ஷாமியும் பதவி விலகியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷாமி பென்ஜிஓ, கூகுள் நிறுவனத்தில் 14 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். குறிப்பாகப் பத்தாண்டுகள் பழமையான “கூகுள் பிரைன்” என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வந்தார்.

கூகுள் தலைமை செயல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து பின்னர் நீக்கம் – பிரதமர் மோடியை விமர்சித்ததாக உத்திரபிரதேச காவல்துறை நடவடிக்கை

இதற்கு முன் பதவியிலிருந்து விலகிய மிட்செல், பணி இடத்தில் நிலவும் பாகுபாடுகள், பாலின பாகுபாடுகள், நிறவெறி, முனைவர்.கெப்ரு மீதான போலியான குற்றச்சாட்டுகள் ஆகியவையே பணிவிலக காரணமாகவும், இதே போன்று முனைவர்.கெப்ரு, பணியிடத்தில் நிலவும் பாகுபாடுகளே பணிவிலக காரணமாகவும் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதவி விலகியுள்ள ஷாமி பென்ஜிஓ தனது மின்னஞ்சலில் பதவி விலகலுக்கு புதிய வாய்ப்புகளைத் தேடப்போகிறேன் என்று மட்டுமே தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

ஜனநாயகத்தை மதிக்காத கூகுள் நிறுவனம் – ராஜினாமா செய்து வரும் ஊழியர்கள்

முனைவர்.கெப்ரு பதவி விலகும்போது அதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் ஷாமி பென்ஜிஓ கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்