Aran Sei

கூகுள் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விலகும் கறுப்பின பெண்கள் – வருடாந்திர பன்முகத்தன்மை ஆய்வறிக்கை தகவல்

கூகுள் நிறுவனத்தில் வேலையில் இருந்து விலகும் கறுப்பின மற்றும் லத்தீன் அமெரிக்கர்கள் விகிதம், 2019 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனத்தின் வருடாந்திர பன்முகத்தன்மை அறிக்கை தெரிவிக்கின்றது.

தேய்வு குறியீடு என கூகுளால் அழைக்கப்படும் வேலை விட்டு விலகும் விகிதத்தின்படி, அமெரிக்காவில் 112 ஆக இருந்த விகிதம் கடந்த ஆண்டு 121 ஆக அதிகரித்துள்ளது. இதே போன்று 97 ஆக இருந்த லத்தீன் அமெரிக்கர்கள் விகிதம் 105 ஆக அதிகரித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை – கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள்

பெண்கள் விகிதத்தைப் பொறுத்த வரை,  லத்தீன் அமெரிக்க பெண்கள்  93 லிருந்து 81 ஆக குறைந்திருந்தாலும், கறுப்பின பெண்களின் விகதம் 110 லிருந்து 146 ஆக அதிகரித்துள்ளது என கூகுள் கூறியுள்ளது.

வெள்ளை இனத்தவர்களை பொறுத்தவரை 117 லிருந்து 112 வரை குறைந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டில் ஊழியர்களுக்கு ஆதரவான செயல்கள் மற்றும் திட்டங்கள்மூலம் இனசிறுபான்மையினர் மற்றும் பிற குழுவினை சேர்ந்த ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முயன்றது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

ஆனால், குறைந்த பிரதிநிதித்துவம் காரணமாக தொழில்நுட்ப துறையில் தொடர்ந்து விரும்பத்தகாததாக உணர்கிறார்கள் என்றும், நிறுவனங்கள் பன்முகத்தன்மையை அதிகரிக்க போட்டியிடுவதால் மற்ற இடங்களிலும் அவர்களுக்கு அதிக தேவை இருப்பதாகவும் கூறியுள்ளனர் என கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கைக்கு அப்பால் கருத்து தெரிவிக்க கூகுள் நிறுவனம் மறுத்துவிட்டது.

நீதிக்கான நீண்ட பயணம் – நிரபராதி என்று நிரூபிக்க 12 ஆண்டுகளை சிறையில் கழித்த காஷ்மீரி

கூகுள் மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக பெண்கள் மற்றும் இனசிறுபான்மையினரை தலைமைக்கு கொண்டு வர அழுத்தம் கொடுத்து வரும் சிவில் உரிமைகள் மற்றும் ஆர்வலர்கள், இவ்வாறு செய்தால் சிறந்த வணிக முடிவுகள் தொடரும் என குறிப்பிட்டுள்ளனர்.

Source : Reuters

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்