Aran Sei

நின்று கிடைத்த நீதி – கோகுல்ராஜ் கொலை வழக்கில் 11 பேரை குற்றவாளி என தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம்

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் உயிரிழந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் கிடந்தார். அந்தக் கொலை வழக்கிற்கான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. யுவராஜ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 11 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்

கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், ஜோதிமணி உள்பட கூட்டாளிகள் 17 பேரை கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜோதிமணி ஏற்கனவே இறந்துவிட்டார்.

கோகுல்ராஜூடன், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரும் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்து வந்தனர். அவர்களுக்குள் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்படுவதற்கு முதல்நாள் அவரும், சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

ம.பி: பட்டியல் சமூகப் பெண்ணுக்கு கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு – பூசாரி கைது

அர்த்தநாரீஸ்வரர் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் சிபிசிஐடி காவல்துறையினர் இதை அறிந்தனர். பின்னர், அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததையும், கோகுல்ராஜை மட்டும் ஒரு கும்பல் தனியாக அழைத்துக்கொண்டு காரில் கடத்திச்செல்வதையும் அந்த வீடியோகாட்சிகளில் இடம் பெற்றிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்னுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு. இதையடுத்து, கோகுல்ராஜின் தாயாரின் மனுவை ஏற்று மதுரை மவாட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 2015 அக்டோபரில் 1ல் கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த ஜாமின் 2018 ஜூன் 2-ல் தேதி ரத்து செய்யப்பட்டது.

பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணையனது மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்தது.

உக்ரைன் – ரஷ்யா போர்: பேஸ்புக், ட்விட்டருக்கு ரஷ்யாவில் தடை

இந்த வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிந்தநிலையில், சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்