Aran Sei

கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக அவதூறு பரப்பிய எச். ராஜா – சட்டமன்றத்தில் உரிமை மீறல் புகார் தெரிவிக்க இருப்பதாக ஜவஹிருல்லா தகவல்

துரை சிறையின் துணைக் காவலர் ஜெயபிரகாஷ் கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக அவதூறு பிரப்பியதற்காக பாஜக உறுப்பினர் எச்.ராஜாமீது சட்டமன்றத்தில் உரிமை மீறல் புகார் அளிக்க இருப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரண்செய்க்கு அவர் அளித்த நேர்காணலில், ”சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் 7 முறை போட்டியிட்டு ஒரு முறை மட்டுமே வென்ற எச். ராஜாவால், பாபநாசம் தொகுதியில் நான் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசிகளால் தான் உருமாறிய கொரோனா உருவாகிறது – நோபல் பரிசு பெற்ற் வைராலஜிஸ்ட் லூக் மொன்டாக்னியர் கருத்து

”மதுரை சிறை துணைக் காவலராக இருந்த ஜெயபிரகாஷ் கொலையில் எனக்குத் தொடர்பிருப்பதாகவும், அவர் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை என எச்.ராஜா கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்தியனின் தந்தை பெயர் தாஸ். அவர், சிவகார்த்திகேயன் இளம் வயதில் இருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்” என குறிப்பிட்டார்.

‘முதலில் கும்பமேளா, இப்போது புனிதயாத்திரை; தவறுகளிலிருந்து எதையும் கற்கவில்லையா?’ – உத்தரகாண்ட் அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

”ஜெயபிரகாஷ் கொலை வழக்கிற்கும் எனக்கு எந்தச் சம்பந்தமும் கிடையாது. இந்நிலையில், ஜெயபிரகாஷை கொலை செய்தவர் தான் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் என எச்.ராஜா பேசியுள்ளார். இதற்காக அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறேன். மேலும், இது தொடர்பாக சட்டமன்றத்தில் உரிமை பிரச்னை எழுப்ப உள்ளேன்.” என கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்