Aran Sei

மத்திய அரசின் ஆணவம் மக்களைக் கொல்கிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கொரோனா பெருந்தொற்றால் நாடு அல்லாடிக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் ”ஆணவமும், உண்மையை மறைக்கும் செயலும் மக்களைக் கொல்கிறது” என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கொரோனாவினால் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்த, ”பணிவு, தெளிவான தடுப்பூசி உத்தி, வருமானத்திகான வழி” ஆகியவை தேவை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள அவர், ”கொரோனா வைரஸால் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த பணிவு, தடுப்பூசி உத்தி, வருமான ஆதரவு தேவை” என பதிவிட்டுள்ளார்.

மேலும், ”இந்திய அரசின் ஆணவமும், உண்மையை மறைக்கும் தன்மையும் லட்கணக்கான மக்களைக் கொல்கிறது” என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பதிவில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில், வெற்றி பிரகடனம், நாங்கள் செய்த செயல்கள் என விளம்பரம் செய்யும் அரசின் ஆணவ உணர்வு மிக மோசமானது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

”இது இந்த அரசாங்கத்தின் தன்மை, அவர்கள் செய்லபடும் விதமே பிரச்னைகளுக்குக் காரணம்” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு என்பது திருவிழா அல்ல” – பிரதமருக்கு ராகுல் காந்தி பதில்

 

மேலும், கொரோனா பரவலில் நாடு இருக்கும் நிலை குறித்து கூறிய ராகுல் காந்தி, ”நாம் நடுக்கடலில் புயலில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். இப்போது கப்பலுக்கு எங்குச் செல்வது என்றே தெரியவில்லை” என பேசியுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்