அடுத்த மாதம் நடைபெறவுள்ள கோவா சட்டமன்ற தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டதால் கோவா முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான லக்ஷ்மி காந்த் பர்சேகர், பாஜகவில் இருந்து விலகுவதாக இன்று தெரிவித்துள்ளார்.
லக்ஷ்மிகாந்த் பர்சேகர் தற்போது வரவிருக்கும் கோவா சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவராகவும், அக்கட்சியின் மையக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். மேலும் பர்சேகர் 2014 முதல் 2017 வரை கோவாவின் முதல்வராகவும் இருந்துள்ளார்.
5 ஆண்டுகளில் கோவாவில் 24 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவி சாதனை – ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் தகவல்
2014 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் ஒன்றிய அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றபிறகு பர்சேகர் கோவாவின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.